வாழைப்பழ comedy என்றதும் நம் நினைவில் முதலில் வருவது ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் தான். கங்கை அமரன் இயக்கத்தில் உருவான ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ராமராஜன், கனகா முக்கிய க தா – பா த் தி ரத் -தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வரும் பாடல்களும், காமெடிகளும் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாது. இந்த நிலையில் 20 வருடம்கழித்து காரகாட்டகாரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பேசிய கங்கை அமரன், கரகாட்டக்காரன் படத்தில் நடித்த அனைவரிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் நல்ல விதமாக போய்க் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிக்கு பின்னர் பலராலும் பேசப்பட்டது சொப்பன சுந்தரி தான். இதை வைத்து பாட்டெல்லாம் கூட வெளியாகி இருந்தது. இந்த நிலையில் யார் அந்த சொப்பன சுந்தரி என்று கரகாட்டக்காரன் 2 படத்தில் கங்கை அமரன் சொல்லப் போகிறாராம்.

மேலும், சொப்பன சுந்தரி என்ற க தா – பா த் தி ரத் -தில் ஒரு முக்கிய நடிகையும் நடிக்க இருக்கிறாராம். மேலும், இந்தப் படத்தில் செந்தில் மற்றும் கவுண்டமணி மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால், கடந்த சில காலமாக கவுண்டமணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருவதால் கரகாட்டக்காரன் 2 படத்தில் கவுண்டமணி நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக ராமராஜன் நடிக்கவில்லை என்பது தான் சோகமான விஷயம்.

‘கரகாட்டக்காரன் 2 பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.கங்கை அமரன் கூட கடந்த வாரம் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் பங்கெடுக்க விரும்பவில்லை என்று ராமராஜன் கூ- றி யுள் ளா- ர்.