2021 இவங்களையும் விடலையா!!! காஞ்சனா 3 படத்தில் நடித்த இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை… காரணம் உள்ளே..

2021 இவங்களையும் விடலையா!!! காஞ்சனா 3 படத்தில் நடித்த இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை… காரணம் உள்ளே..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா 3 படத்தில் ரோஸி கதாப்பாத்திரத்தில் நடித்த ரஷ்ய நடிகை கோவாவில் தற்கொலை செய்து இறந்து போன சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதே போல் இன்னொரு ரஷ்ய பொன்னும் கோவாவில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் கோவா போலிசை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான அலெக்சான்ரா சோவி கோவாவில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். இவரது வயது 24 மட்டுமே. இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைபடத்தில் இவர் ரோஸி என்ற கதாநாயகியாக நடித்துள்ளார்.

காஞ்சனா திரைப்படம் வெளியான அதே ஆண்டில் சென்னையை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவனும் போலிசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான அலெக்சான்ரா சோவி கோவாவில் தனது காதலனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த வியாழன் அன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அலெக்சான்ரா தனது காதலனை பிரிந்த சோகத்தில் தான் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே போல் இன்னொரு ரஷ்ய பெண்ணும் அதே வியாழன் அன்று கோவாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்..

எனவே இந்த இரண்டு மரணங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா அல்லது தற்செயலாக நடந்தவைகளா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply