2017-2018ல் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவரா நீங்கள்… உங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு…

கல்வி

பள்ளி கல்வி துறை அமைச்சர் இலவச மடிக்கணினி தொடர்பான ஒரு முக்கிய மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசானது மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் இலவச மடிக்கணினியை 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டமானது 2011 ல் தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 51 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 7257 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது சில காலமாக இந்த மடிக்கணினி வழங்குவதில் தொய்வு ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து சட்ட பேரவையில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

கடந்த 2017-2018 ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாதது தொடர்பாக மார்சிச்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் V.P மாலி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தினை கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்த விரிவான விளக்கத்தினை சட்ட பேரவையில் கொடுத்திருந்தார்.

கடந்த 2011 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இலவச மடிக்கணினி வழங்கக்கூடிய பணிகளானது நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை 51 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பயன் பெற்றதாகவும் தெரிவித்தார்.

அதே போல 2017- 2018ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் முழுமையாக வழங்கப்பட்டன எனவும் மீதம் இருக்கக்கூடிய மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு அப்போது வழங்க முடியாத சூழ்நிலை இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதே போல் தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அத்தாட்சி அதாவது bonafide certificate வழங்கப்படும் நிலையில் மடிக்கணினிகள் வழங்கப்படும் அரசானை பிறப்பிக்கப்பட்டு நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2020-2021ல் 11 வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கொடுக்கப்படாத மடிக்கணினி அதே போல் இதுவரை கடந்த ஆண்டு கொரோனா கால கட்டத்தால் நிறைய மாணவர்களுக்கு மடிக்கணினிவழங்க முடியாத சூழ்நிலை இருந்தது. ஒட்டு மொத்தமாக விடு பட்ட மாவர்கள் 11 லட்சம் பேருக்கு விரைவில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply