அஜித்தின் படத்தை இயக்கப் போகும் 12 வயது சிறுவன்!!!

சினிமா

சினிமாத் துறையில் தொடர்ந்து சாதித்து வரும் 12 வயது கேரள சிறுவன் தனது படத்தை நடிகர் அஜித்திடம் காண்பித்து எதிர்காலத்தில் அவரை வைத்து படம் எடுக்க ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆஷிக் ஜினு, சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளார். இந்த சிறுவன் 6 குறும்படங்கள், ஒரு ஆவணப் படம் மற்றும் 2 வணிக ரீதியிலான படங்களை இயக்கியுள்ளான்.

இதன் மூலம் இந்தியாவின் மிக குறைந்த வயது இளம் இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளான். சிறுவன் ஆஷிக் இயக்கிய முதல் குறும் படமான ‘பிடிகா’ என்ற குறும்படம் கேரளாவின் மிக சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு படமாக அனைவராலும் பேசப்பட்டது.

அவனது மற்றொரு குறும்படமான பசி என்ற குறும்படம் மூலம் 2020க்கான சிறந்த குறும்பட இயக்குனர் என்ற விருது கிடைத்துள்ளது. மேலும் இளம் இயக்குனர்களுக்காக தரப்படும் இந்திய அளவிலான universal ரெகார்ட் விருதையும் பெற்றுள்ளான்.

மேலும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘தி ரூல்ஸ் ஆப் பீஸ்’ என்ற குறும்படத்தை இயக்கி சிறந்த ஊரடங்கு திரைப்படத்திற்கான இன்டர்நேஷனல் விருதையும் பெற்றுள்ளான்.6 குறும்படங்களை இயக்கியுள்ள சிறுவன் ஆஷிக் தற்போது ‘தி கொலம்பியன் அகாடமி’ என்ற வணிக ரீதியான முதல் படத்தை இயக்கியுள்ளான்.

இந்த நிலையில் தான் தற்போது போதை அடிமை குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் ஈ வீ ஏ என்னும் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளான் ஆஷிக். 30 நாட்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசரானது சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செவ்வாய் கிழமை திரையிடப்பட்டது.

அதனை தொடர்ந்து பேசிய ஆஷிக், தனது திரைப்படத்தை நடிகர் அஜித்திடம் காண்பிக்க வேண்டும் எனவும் அவரை வைத்து வருங்காலத்தில் படம் இயக்க வேண்டும் என்றும் தெரிவித்தான்.

இதனை தொடர்ந்து பேசிய ஈ வி ஏ படத்தின் தயாரிப்பாளர் கலைச்செல்வி, சிறு வயது முதல் சிறுவன் ஆஷிக் இயக்கியுள்ள படங்களும் வாங்கியுள்ள விருதுகளும் தன்னை பெரிதும் கவர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ரியாஸ்கான், இளம் இயக்குனரான சிறுவனின்
திறமையை கண்டு வியப்படைகிறேன். இவன் இயக்கம் படத்தில் நடிப்பதற்கு எனக்கும் ஆர்வமாக இருக்கிறது என்றார். இவனது பெற்றோரின் ஆதரவு பாராட்டத்தக்கது எனவும் கூறினார்.

12 வயதில் குறும்படம், ஆவணப்படம் மற்றும் வணிக ரீதியிலான படங்களை இயக்கியுள்ள கேரள சிறுவன் தற்போது தமிழில் இயக்கியுள்ள ஈ வி ஏ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply