ஹேமா, லட்சுமிக்கு DNA TEST எடுக்க பாரதி போட்ட திட்டம்.. வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் 11/10/2022அப்டேட்

ஹேமா, லட்சுமிக்கு DNA  TEST  எடுக்க பாரதி போட்ட திட்டம்.. வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் 11/10/2022அப்டேட்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ஹேமா மற்றும் லட்சுமிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க பாரதி புதிய திட்டத்தை போட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நாடகம் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் போட்டு பாரதி வீட்டுக்கு வந்துட்டாரா என கேட்க இன்னும் வரவில்லை ஏனென கேட்க மருத்துவமனையில் அவரை பார்த்து நீங்க எப்ப DNA டெஸ்ட் எடுக்க போறீங்க என கேட்ட விஷயத்தை சொல்கிறார்.

இந்தப் பக்கம் வெண்பா ஷர்மிளாவை நிற்க வைத்து என்னமோ எனக்கு பெரிய பணக்கார மாப்பிள்ளையா பாக்குறேன், இதுக்காகத்தான் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கேன் என்ன சீன் போட்ட நீ பார்த்த மாப்பிள்ளையோட லட்சணத்தை பாரு. இனிமே எனக்கு மாப்பிள்ளை பார்க்கிற தகுதிய நீ இழந்துட்ட நான் யாரை திருமணம் பண்ணிக்கணும் எப்ப திருமணம் பண்ணிக்கணும்னு முடிவெடுக்க வேண்டியது நான் தான் என கோவமாக பேசிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

அதன்பிறகு சௌந்தர்யா அகில் மற்றும் அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாரதி வீட்டுக்கு வர நேராக சௌந்தர்யாவிடம் வந்து சாப்பிட்டீங்களா என கேட்டு ஊர்ல நிறைய குழந்தைகளுக்கு ஜுரம் வந்துட்டு இருக்கு நான் ஹேமாவுக்கு ஃபுல் பாடி செக் அப் பண்ணலாம்னு இருக்கேன் என சொல்லி அப்படியே லட்சுமிக்கு பண்ணலாம்னு இருக்கேன் என சொல்ல சௌந்தர்யா பாரதியை நக்கல் அடிக்க நான் யாருக்கும் டெஸ்ட் எடுக்கல போதுமா என கோபப்படுகிறார். உடனே பாரதியை சமாதானப்படுத்தி நீ எத்தனை பேரை வேணும்னாலும் கூட்டிட்டு போ டா, எதுவும் சொல்லல என சொல்லி அனுப்புகின்றனர்.

பிறகு பாரதி ரூமுக்குள் இருக்க அப்போது வெண்பா போன் போட்டு அந்த ரோகித் எவ்வளவு பெரிய பிராடுனு எங்க எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு இனி அவன் என்னோட லைஃப்ல கிடையாது, துரத்தி விட்டாச்சு. நம்ம கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல என சொல்ல பாரதி அப்படியா என கேட்க என்ன நீ சந்தோஷமா எனக்கு வாழ்த்து சொல்லுவேன்னு பார்த்தா இப்படி சொல்ற என வெண்பா கேட்க மைண்ட் வாய்ஸ் நான் என்ன சந்தோஷமாவா உன் கழுத்துல தாலி கட்ட போறேன் என நினைக்க வெண்பா மைண்ட் வாய்ஸை அப்படியே சொல்லி ஷாக் கொடுக்கிறார்‌.

பிறகு ஹேமா ரூமுக்குள் வந்து போனை வாங்கி வெண்பாவிடம் நைட் 11 மணி ஆச்சு இப்ப போய் எங்க அப்பாவுக்கு போன் பண்ணி பேசறீங்க அவரு ஹாஸ்பிடல் போயிட்டு டயர்டா வந்து இருப்பாரு போன வையுங்க என சொல்லி போனை கட் செய்து விடுகிறார். பிடிக்காதவர்கள் போனை எடுக்கவே கூடாது. பிளாக் லிஸ்டில் போட்டு விடனும் என பாரதியிடம் சொல்ல 10 ஆண்டுகள் முன்னாடியே இந்த வெண்பாவை பிளாக் லிஸ்ட்ல போட்டு இருக்கணும் என பாரதி நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா நாடகம் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply