ஹனிமூன் போன இடத்தில் கோபி மகள் இனியா கொடுத்த அதிர்ச்சி.. மயூவால் வந்த சோதனை – பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் 11/10/2022அப்டேட்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஹனிமூன் போன இடத்தில் கோபிக்கு இனியா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களான பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி என இரண்டு நாடகக்களும் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் இன்று முதல் ஒரு மணி நேரம் எபிசோடாக ஒளிபரப்பாகின்றன.இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு விருது விழா ஒன்றுக்காக வந்திருந்தார். ராதிகாவை வெளியே வெயிட் பண்ண சொல்லிவிட்டு ரூம் சாவியை வாங்குவதற்காக உள்ளே போன கோபி அங்கு தன்னுடைய நண்பன் ஒருவனை பார்க்க இருவரும் நலம் விசாரித்துக் கொள்ள பிறகு நண்பன் மோகன் பாக்கியா குறித்து விசாரிக்க கோபியின் முகம் மாறுகிறது. ராதிகாவை திருமணம் பண்ணி இருக்கும் விஷயத்தை மறைத்து நாளைக்கு எல்லோரும் வருவாங்க பசங்களும் நாளைக்கு வருவாங்க என சொல்லி சமாளிக்கிறார்.

கோபியின் நண்பன் பாக்யாவை பார்த்து எவ்வளவு நாளாச்சு? மட்டன் பிரியாணி அவ்வளவு அருமையா செய்வா நான் எப்ப பிரியாணி சாப்பிட்டாலும் பாக்கியா ஞாபகம் தான் வரும் என சொல்ல கோபி ராதிகாவை அறிமுகப்படுத்தாமல் எப்படியாவது கூட்டிச் சென்று விட வேண்டும் என தவிக்கிறார். ராதிகா ஒரு பக்கம் போன் பேசிக் கொண்டிருக்க கோபி தன்னுடைய நண்பனை சமாளித்து அப்புறம் பேசலாம் என சொல்லி அனுப்பி வைத்துவிட்டு ராதிகாவை கூட்டிக்கொண்டு ரூமுக்கு வந்து விடுகிறார்.

ராதிகா கோபியிடம் யாரது என கேட்க தன்னுடைய நண்பன் மோகன் என சொல்ல ஏன் எனக்கு அறிமுகம் செய்து வைக்கல என ராதிகா கோபப்படுகிறார். இதனால் கோபி ராதிகாவை சமாளிக்க முயற்சி செய்கிறார். நாளைக்கு அவார்ட் பங்ஷனுக்கு நானும் வருவேன் அப்போ அறிமுகம் பண்ணி வையுங்க என ராதிகா சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறான். எப்படியாவது ராதிகாவை ரூமிலேயே விட்டுவிட்டு விருது விழாவுக்கு சென்று விட வேண்டும் என திட்டம் போடுகிறார். மேலும் ராதிகாவுடன் ரொமான்ஸ் ஆக பேச முயற்சி செய்ய அப்போதெல்லாம் மயூ போன் போட்டு தொந்தரவு செய்கிறார். இதனால் கோபி டென்ஷன் ஆகிறார்.

இன்னொரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து மூர்த்தி தனம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் திருமணம் ஒன்றுக்காக கொடைக்கானலுக்கு வர சரியாக கோபியின் ரூமுக்கு எதிரே இவர்களுக்கும் ரூம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பாக்யாவின் குடும்பம் கொடைக்கானலுக்கு வருகிறது. எல்லோரும் சந்தோஷமாக வந்து கொடைக்கானலில் இறங்க இவர்களுக்கும் இதே இடத்தில் ரூம் போடப்பட்டுள்ளது. இந்த பக்கம் ராதிகா தன்னுடைய மகளுடன் பேசிக் கொண்டிருக்க கோபி இனியாவுக்கு உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என வாய்ஸ் மெசேஜ் செய்ய மெசேஜ் பாத்துட்டு இனியா கோபியின் நம்பரை பிளாக் செய்கிறார்.
பிறகு ஹோட்டலுக்கு வரும் இனியா தவறுதலாக சென்று கோபியின் ரூமை திறக்க முயற்சி செய்ய எழில் அது நம்ப ரூம் இல்ல என தடுத்து நிறுத்துகிறார். பிறகு ராதிகா மேலே போன் பேச பாக்கியலட்சுமி குடும்பத்தார் எல்லோரும் கீழே நின்று கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய ஒரு மணி நேரம் எபிசோட் முடிவுக்கு வருகிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.