ஸ்ருதி ஹாசனின் இந்த காதலும் அவ்வளவு தானா??… மூன்றாவது காதலில் திருமணத்திற்கு நோ சொன்ன ஸ்ருதி!!!

ஸ்ருதி ஹாசனின் இந்த காதலும் அவ்வளவு தானா??… மூன்றாவது காதலில் திருமணத்திற்கு நோ சொன்ன ஸ்ருதி!!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். தந்தையைப் போலவே இவருக்கும் சினிமாவில் ஆர்வம் அதிகம். தமிழ் திரையுலகை விட தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்து வருகின்றன.

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்துள்ளார். அந்த படங்களில் தனுஷுடன் நடித்த 3 படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். ஆனாலும் அதன் பிறகு அவ்வளவாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு சினிமாவிற்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு காதலில் இறங்கினார். வெளிநாட்டு காதலர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி இருவரும் ஊர் சுற்றி வந்தனர்.

பின்னர் வழக்கம்போல் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் ஸ்ருதி ஒரு இசைக்கலைஞரைக் காதலிப்பதாக கிசுகிசுப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவரும் அதனை உறுதி படுத்தும் வகையில் அவருடன் பொது இடங்களில் முத்தம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்..

தற்போது லாக்டவுன் காரணமாக நகிகைகள் சமைப்பது போட்டோசூட் எடுப்பது போன்ற காரியங்களை செய்து வருகின்றனர். இதே போன்று சோசியல் மீடியாவில் லைவ் வருவதும் ஒரு வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஸ்ருதிஹாசனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடி ஒளிபரப்பு செய்தார்.

அந்த நேரடி ஒளிபரப்பில் ரசிகர் ஒருவர் அவரிடம் திருமணத்தை பற்றிய கேள்வியைக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்ருதிகாசன், நிச்சயமாக நான் அதற்கு ஒத்து போக போவதில்லை எனவும், மேலும் இந்த ஆண்டில் நான் பல துன்பங்களுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இந்த காதலும் அவ்வளவு தான் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவரின் முதல் காதலாக நடிகர் சித்தார்த் பேசப்பட்டார். இருவரும் லிவிங் டுகெதர் முறையில் இருப்பதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply