வெண்பா கழுத்தில் தாலி கட்ட போன பாரதிக்கு கடைசி நொடியில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

வெண்பா கழுத்தில் தாலி கட்ட போன பாரதிக்கு கடைசி நொடியில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி ரிசல்ட் வர இன்னும் 2 நாள் ஆகும் என்பதால் இப்போதைக்கு வெண்பா கழுத்தில் தாலி கட்ட வேண்டாம் என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்ய அப்போது பாரதியை பார்த்துவிட பாரதி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ஏன் பாரதி வெளியே இருக்கிற உள்ள வா முகூர்த்த நேரத்துக்கு டைம் ஆகுது என சொல்ல பாரதி இன்னும் 2 நாள் கழிச்சு திருமணம் பண்ணிக்கலாம் இப்போ எங்கேயாவது போயிடலாம் என சொல்லி கூப்பிட வெண்பா வழக்கம் போல் நீ தாலி கட்டலனா நான் செத்து போயிடுவேன் என மிரட்டுகிறார். பிறகு பாரதியின் கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் செல்கிறார்.

பிறகு ஐயர் மாலையை போடச்சொல்லி சொல்ல பாரதி தயக்கத்தோடு நிற்க வெண்பா மாலை எடுத்து கையில் கொடுத்து போட வைக்கிறார். அடுத்து தாலியை எடுத்துக் கொடுத்து கட்டு பாரதி என வெண்பா கழுத்தை நீட்ட கடைசி நொடியில் கண்ணம்மா உட்பட எல்லோரும் வந்து நின்று கல்யாணத்தை நிறுத்துகின்றனர். அப்போது வெண்பா தாலியை கட்டு என பாரதியை வற்புறுத்த கண்ணம்மா வெண்பாவை பளார் என அறைகிறார்‌. கட்டின பொண்டாட்டி நான் இருக்கும் போது இன்னொருத்தி கழுத்துல தாலி கட்டுவியா? சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? நீ மட்டும் தாலியை கட்டியிருந்த இந்நேரம் இழுத்துப் போய் போலீஸ் ஸ்டேஷன்ல விட்டு இருப்பேன்.

இப்ப சொல்றேன் நீ தைரியமான ஆம்பளையா இருந்தா அவ கழுத்துல தாலியை கட்டு என் கண்ணம்மா சொல்ல பாரதி தலை குனிந்து நிற்கிறார். பின்னர் எல்லோரும் பாரதியை பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். எதுக்காக இந்த வெண்பா கழுத்துல தாலி கட்ட வந்த? பதில் சொல்லு என எல்லோரும் கேட்க பாரதி என்ன சொல்வது என தெரியாமல் தவிக்கிறார். அடுத்து பாரதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply