வெண்பாவை கல்யாணம் செய்ய கோவிலுக்கு வந்த பாரதிக்கு கடைசியில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

வெண்பாவை கல்யாணம் செய்ய கோவிலுக்கு வந்த பாரதிக்கு கடைசியில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் மண்டபத்தில் கண்ணம்மா சாந்தியின் கழுத்தில் அருவாள் மனையை வைத்து பாரதியுடன் திருமணம் நடக்க போகுது, போரூர் பக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் தான் திருமணம் நடக்கப்போகிறது என்ற விஷயத்தை தெரிந்து கொள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கட்டுன பொண்டாட்டி நான் இருக்கும் போது எப்படி வேறொரு திருமணம் பண்ணுவார் அத்தை கிளம்புங்க போகலாம் என எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகின்றனர்.

இந்த பக்கம் கோவிலுக்கு வந்த வெண்பா பாரதியை தேடி அலைந்து பாரதிக்கு போன் அடிக்க பாரதி போனை எடுக்காமல் இருக்கிறார். பிறகு கண்ணம்மா காரில் வந்து கொண்டிருக்கும் போது உங்க பையனுக்கு எவ்வளவு தைரியம் பழைய கண்ணம்மாவை திரும்ப பார்க்கப் போறாரு அவர் மட்டும் இல்லை எல்லாரும் பார்க்கத்தான் போறீங்க அங்க உங்க புள்ளைக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க என கூறுகிறார்.

இன்னொரு காரில் ஷர்மிளா வெண்பா இப்படி பண்ணுவானு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என புலம்ப மற்றொரு காரில் ஹேமா லட்சுமி என இருவரும் அழுது கொண்டு இருக்க அஞ்சலி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிறகு கோவிலில் வெண்பாவை அர்ச்சகர் கூப்பிடுவதாக ஒருவர் வந்து சொல்ல வெண்பா அர்ச்சகரை பார்க்க போன நேரத்தில் பாரதி கோவிலுக்கு வந்து விடுகிறார்.

ஆனாலும் கோவிலுக்குள் செல்லாமல் காரிலேயே இருந்து டெஸ்ட் குறித்து கேட்க போன் போட யாரும் போனை எடுக்காமல் இருக்க பாரதி டென்ஷன் ஆகிறார். அதன் பின்னர் வெண்பா போன் போட பாரதி போனை எடுத்து வந்துகிட்டு இருக்கேன் ஒரே டிராபிக் என சொல்ல நான் கோவிலுக்குள் கல்யாண வேலைகளை பார்க்கிறேன் நீ வந்ததும் நேரா உள்ள வந்துடு என சொல்ல பாரதி சரியென சொல்லி போனை வைக்கிறார்.

பிறகு டிஎன்ஏ டெஸ்ட் கிளினிக்கில் இருந்து போன் வர பாரதி எடுத்து பேசி ரிசல்ட் வந்துடுச்சா என்ன ஆச்சு என்ன கேட்க சாரி சார் மெஷின் ரிப்பேர் ரிசல்ட் வர ரெண்டு நாள் ஆகும் என சொல்ல பாரதி பயங்கர டென்ஷன் ஆகி சத்தம் போடுகிறார். தப்பு எங்க மேல தான் மிஷின் ரிப்பேர் சரி பண்ணிடலாம்னு நினைச்சேன். ஆனா சரியாகல நீங்க எடுக்க போற முக்கியமான முடிவு ஒரு ரெண்டு நாளைக்கு தள்ளி போடுங்க என சொல்லி ஃபோனை வைத்து விட பாரதி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா தொடர் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply