விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க போகும் ரஸ்யா

உலகம்

இப்போது பூமிக்கு மேல் சுற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனங்-களும் இதில் சேர்ந்தன.

இப்போது மேற்கூறிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த-நிலையில் பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடு-களுடன் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ரஷியா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தொடர்பாக பிற நாடு-களுடன் ரஷியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் வருகிற 2024-ம் ஆண்டுடன் காலாவதியாகிறது. இந்த சூழலில் தான் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் 2024-க்கு அப்பால் ஒத்துழைப்புக்கான படிவங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கூட்டாளி-களுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் போது, இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும் ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply