லட்சுமி மற்றும் ஹேமாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டிய தீவிரவாதிகள்.. கண்ணம்மா வைத்த செக் – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் :19/09/2022

லட்சுமி மற்றும் ஹேமாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டிய தீவிரவாதிகள்.. கண்ணம்மா வைத்த செக் – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் :19/09/2022

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் தீவிரவாதிகள் வைத்த கோரிக்கையை அரசு தரப்பு மொத்தமாக நிராகரித்ததாக போலீஸ் தரப்பு சொல்ல கோபமடையும் தீவிரவாதிகள் லட்சுமி மற்றும் ஹேமாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளனர். மதியம் 12 மணிவரை தான் டைம்‌. இல்லனா ஒவ்வொரு உயிரா போய்கிட்டே இருக்கும் என மிரட்டுகின்றனர். இதனால் சௌந்தர்யா ஒரு பக்கம் கதறி துடிக்கிறார்.

பிறகு போலீஸ் தரப்பு வெளியே தூக்கி வீசப்பட்ட தீவிரவாதியின் உடலை போஸ்ட் மாடத்திற்கு அனுப்ப முடிவு செய்ய அப்போது அதிகாரி பாடியை செக் பண்ணீங்களா என கேட்கிறார். அடுத்து பாடி செக் செய்யும்போது கண்ணம்மா அதில் மருத்துவமனைக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்க இருக்கும் வழியை பற்றி எழுதி இருக்கிறார். மேலும் ஒரு தீவிரவாதி குடும்பம் குறித்த அறிக்கைகளும் எழுதி இருக்கிறார். இதனைப் பார்த்த போலீஸ் தரப்பு பிரில்லியன்ட் ஐடியா என மகிழ்ச்சியடைகின்றனர்.

இந்த பக்கம் கண்ணம்மா லட்சுமி மற்றும் ஹேமாவை சமாதானப்படுத்தி படுக்க வைத்து விட்டு அஞ்சலி ஒருத்தர் மேல ஒருத்தர் இவ்வளவு பாசமாய் இருக்காங்க என பேச இல்லாம இருக்குமா ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வயதில் பத்து மாசம் வளர்ந்து பிறந்தவர்களாச்சே என சொல்ல இந்த விஷயத்தை லட்சுமி கேட்டு வி டு கி றா ர்.

லட்சுமி நானும் ஹேமாவும் ஒன்னா பொறந்தவளா என கேட்க கண்ணம்மா ஒரு கட்டத்தில் ஆமாம் என்று சொல்ல லட்சுமி மகிழ்ச்சியடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா தொடர் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply