ராதிகா வீட்டுக்கு போன முதல் நாளே கோபிக்கு வந்த சோதனை.. செழியன் எடுத்த அதிரடி முடிவு இன்றைய முழு எபிசோட் 08/10/2022அப்டேட்.

ராதிகா வீட்டுக்கு போன முதல் நாளே கோபிக்கு வந்த சோதனை.. செழியன் எடுத்த அதிரடி முடிவு இன்றைய முழு எபிசோட் 08/10/2022அப்டேட்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ராதிகா வீட்டுக்கு போன முதல் நாளே கோபிக்கு சோதனை தான் வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் மண்டபத்தை விட்டு கிளம்பும்போது ராதிகா பாக்கியாவை பார்த்ததும் கோபியின் கையை இறுக்கமாக பிடிக்க பாக்யா கண்டும் காணாமல் திரும்பிக் கொள்கிறார்.

இதையடுத்து ஈஸ்வரி மற்றும் இனியா என எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் இனியா செழியனை கட்டிப்பிடித்து அப்பா அந்த ராதிகா ஆன்ட்டியை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என சொல்ல அவன் அதிர்ச்சி அடைகிறான். பிறகு ஜெனி இதெல்லாம் ஆன்ட்டிக்கு தெரியுமா என சொல்ல அம்மா அங்க தான் சமைச்சிட்டு இருக்காங்க என்ன சொன்னதும் செழியன் இன்னும் அதிகம் கதறி அழுகிறான். அம்மா எப்படி இதெல்லாம் தாங்கிக்கிட்டாங்க, அப்பா இப்படி பண்ணுவார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல என சொல்லி அழுகிறான்.

இந்த பக்கம் ராதிகா மற்றும் கோபி வீட்டுக்கு வந்ததும் வெளியில் நிற்க வைத்து எடுக்க அக்கம்பக்கத்தினர் எல்லோரும் இவர்தான் அடிக்கடி இங்கு வந்துட்டு போனாரு என பேசுகின்றனர். பிறகு உள்ளே அழைத்துச் சென்று பாலும் பழமும் கொடுத்த பிறகு செல்பி எடுத்த பிறகு முடிஞ்சிடுச்சா உள்ள போறேன் என ராதிகா எழுந்து கிளம்பி விட ஒவ்வொருத்தராக கோபியை கண்டு கொள்ளாமல் எடுத்துச் சென்று விடுகின்றனர். வீட்டில் தனியாக கோபி அமர்ந்து கொண்டிருக்க அவர் அதிர்ச்சி அடைகிறார்.

இந்த பக்கம் பாக்கியா வீட்டுக்கு வர செழியன் பாக்கியாவை பார்த்ததும் அம்மா நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு அப்பாவுக்கு கண்மூடித்தனமா சப்போர்ட் பண்ணு ஆனா நீ பண்ணுவது தான் சரி இனிமே இந்த குடும்பத்தை நான் பார்த்துப்பேன் நீ எதுக்காகவும் கவலைப்படாத என கட்டிப்பிடித்து கதற இனியா நானும் தப்பு பண்ணிட்டேன் என அழுகிறார்.

பிறகு பாக்கியா கிச்சனில் அமர்ந்து அழுது கொண்டிருக்க அப்போது வந்த ஈஸ்வரி பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார். உனக்காக நாங்க இருக்கும் எதுக்காகவும் கவலைப்படாத என சொல்கிறார். அதன் பிறகு எழில் வீட்டுக்கு வர பாக்கியா எதுவும் சொல்லாமல் போய் கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம் என சொல்ல அவன் மேலே செல்ல இனியா மற்றும் செழியன் கண்ணீருடன் நடந்த விஷயங்களை சொல்ல எழில் கீழே இறங்கி வந்து அம்மாவை கட்டி பிடித்து அழுகிறான். போட்டோவில் கோபியின் முகத்தை கையால் அடித்து உதைத்து சிதைக்கிறார்.பிறகு இனிமே சந்தோஷமா இரு அந்த ஆள் போகட்டும் அவர் நமக்கு வேண்டாம் என சொல்லி இனியாவிடம் நீ எதுக்கும் கவலைப்படாத உனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்கும் நாங்க பார்த்துக்கிறோம் என சொல்லிவிட்டு ஈஸ்வரிடம் உங்களுக்கு நாங்க இருக்கும் பாட்டி என அழ ஈஸ்வரியும் கண் கலங்கி அழுகிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply