ராதிகா வீட்டில் பசியில் தவியாய் தவிக்கிறார் கோபி.

ராதிகா வீட்டில் பசியில் தவியாய் தவிக்கிறார் கோபி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நாடகம் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது வரும் வர்ஷினி சதீஷை வெளியே அனுப்பிவிட்டு எழிலை காதலிப்பதாக சொல்ல அதிர்ச்சியாகும் ஏழில் நான் அமிர்தாவை காதலிக்கிறேன் என சொல்கிறார். ஆனாலும் வர்ஷினி அவங்க திருமணம் ஆகி அவருடைய கணவர் இறந்துட்டாங்க, அவங்கள விடுங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க என்ன சொல்றீங்க என்ன கேட்க எழில் சாரிங்க என சொல்லி விடுகிறார். இதனால் வர்ஷினி கோபமாக எழுந்து சென்று விடுகிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் கோபியை ராதிகா கண்டுகொள்ளாமல் போனில் பேச ஒரு காபி குடிச்சா நல்லா இருக்கும் என நினைக்கும் கோபி ராதிகாவிடம் காபி கேட்க நினைக்க கடைசி வரை அவரால் கேட்க முடியாமல் போகிறது. அடுத்து போன் பேசி முடித்து விட்டு வரும் ராதிகாவிடம் காபி குடிச்சா நல்லா இருக்கும்னு தோணுது என சொல்ல எனக்கும் அப்படித்தான் தோணுது ஆர்டர் பண்ணி இருக்கலாம் இல்ல என கூறுகிறார்.

பிறகு மயூ வந்து எனக்கு ஒரு சம்ல சந்தேகம் இருக்கு என சொல்ல அம்மா பிஸியா இருக்கேன் கோபி அங்கள் கிட்ட கேளு என்ன சொல்கிறார். பிறகு கோபி பசியோடு மயூவுக்கு சொல்லிக் கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் மையு லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு எனக்கு சொல்ல எனக்கும் பசிக்குது என கோபி கூறுகிறார்.

அப்படியே இந்த பக்கம் பாக்கியா திருமணம் ஆர்டர் கிடைத்ததற்காக வீட்டில் எல்லோருக்கும் சிக்கன் பிரியாணி சிக்கன் 65 என விதவிதமாக சமைத்து அனைவரும் சந்தோஷமாக சாப்பிடுகின்றனர். பிறகு வேலையை முடித்துவிட்டு வரும் ராதிகாவிடம் இருவரும் பசிக்குது என சொல்ல ஏன் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க ஏதாச்சு ஆர்டர் பண்ணி இருக்கலாமே என சொல்ல கோபி ஏதாவது ஸ்பெஷலா பண்ணி இருப்பேன்னு நினைச்சேன் என கூறுகிறார்.

அப்படியா ஒரு 10 மினிட்ஸ் என கிச்சனுக்கு போகும் ராதிகா எதையோ சமைக்க தொடங்க பாக்யா வீட்டிலிருந்து பிரியாணி வாசனை வர கோபி இங்கிருந்துதான் வருகிறது. உங்க அம்மா நமக்காக பிரியாணி செய்கிறார், இன்னைக்கு ஒரு கட்டு கட்டிடலாம் என கோபி மயூவிடம் சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்க பிறகு ராதிகா சாப்பிட கூப்பிட இருவரும் பிரியாணி என்ற ஆவலோடு சாப்பிட செல்கின்றனர்.

சாப்பிட போன இடத்தில் ராதிகா எதையோ பவுலில் போட்டு கொடுக்க அதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். சாப்பிட மனமில்லாமல் சாப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி நாடகம் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply