ராதிகா வீட்டில் கோபிக்கு வந்த சோதனை !!

ராதிகா வீட்டில் கோபிக்கு வந்த சோதனை !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

ராதிகா வீட்டில் கோபிக்கு சோதனை வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பிரியாணி என்ன ஆவலோடு போன கோபிக்கு ராதிகா ஓட்ஸ் கொடுக்க சாப்பிட பிடிக்காமல் சாப்பிடுகிறார். பிறகு 25 வருஷத்துக்கு அப்புறம் சேர்ந்து இருக்கும் என்று ரொமான்ஸ் பண்றாளா பாரு என ராதிகாவிடம் ரொமான்ஸ் செய்ய ரூமுக்கு போக கட்டிலில் மகளுடன் சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.அதுக்குள்ள தூங்கிட்டியா நான் இங்க படுக்கிறது என மயூவிடம் கொஞ்சம் இடம் கேட்க அவள் எட்டு உதைக்க கோபி கீழே போய் விழுகிறார். இந்த பக்கம் ராதிகாவிடம் கோபியிடம் கேட்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க கோபி என சொல்ல வேறு வழி இல்லாமல் தரையில் படுத்து தூங்குகிறார். என் வீட்ல எவ்வளவு பெரிய பெட் இருக்கும் அதெல்லாம் விட்டுட்டு என் நிலைமை இப்படி ஆகிவிட்டது என புலம்புகிறார்.

அடுத்து மறுநாள் காலையில் பாக்கியா குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க எழில் ஜாக்கிங் செல்வதாக கிளம்ப கோபியும் ஜாக்கிங் வ ரு கி றா =ர். எழில் வேகமாக ஓடி வந்ததை பார்த்து கோபி டப் கொடுத்து ஓடி வந்து நிற்க வைத்து நான் 20 வயசுல இருந்தே ஓடிக்கிட்டு உடம்பை பிட்டா வச்சிட்டு இருக்கேன், ரெண்டு பேருக்கும் போட்டி வச்சுக்கலாமா என கோபி கேட்க எழில் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என கூறுகிறான்.

பின்னர் கோபி ஏன் தோத்துடுவேன்னு பயமா? உன்னை நினைக்கும் உன்னை வச்சு பார்த்தா என்ன உன் தம்பின்னு தான் சொல்லுவாங்க என சொல்ல எழில் முறைக்கிறான். கொஞ்சம் டூ மச் தான் என கோபி சொல்லிவிட்டு பிறகு இருவருக்கும் போட்டி வைத்து ஓடுகின்றனர். போட்டியில் எழில் ஜெயித்து விட கோபி கெத்து விடாமல் பேச இனி நீங்க தோத்துக்கிட்டு தான் இருக்க போறீங்க அதனால பார்த்துக்கிட்டு தான் இருக்க போறோம் என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.பிறகு வீட்டுக்கு வந்த கோபி பழக்க தோஷத்தில் பாக்யா ப்ளாக் காபி என கேட்டு பிறகு இது ராதிகா வீடு என்பது நினைவிற்கு வந்து கோபி வார்த்தையை அடக்கிக் கொள்கிறார். அடுத்து ராதிகா வந்ததும் ஒரு காபி கிடைக்குமா என கேட்க ராதிகா முறைத்து பார்க்கிறார். இன்றைய பாக்கியலட்சுமி தொடர் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply