ரஸ்க் பிரியரா நீங்கள்… இனி ரிஸ்க் எடுக்க வேண்டாம்!!! இதனை பார்த்த பின் முடிவு செய்யுங்கள்…

தமிழ்நாடு வைரல் வீடியோ

ரஸ்க் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள், நோயாளிகள் அதிகம் ரஸ்க் தான் சாப்பிடுகிறார்கள். அது சுகாதார முறையில் தான் தயாரிக்கப் படுகிறதா என யாரும் பார்ப்பதில்லை.

தற்போது அந்த ரஸ்க் தயாரிக்கும்போது அதனை தயாரிக்கும் ஊழியர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என ஒரு வீடியோ வெளியாகி அதிக பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

காரைக்குடியில் தரமற்ற முறையில் சுகாதாரமே இல்லாமல் ரஸ்கை தரையில் கொட்டி தயாரித்த தொழிற்சாலை ஒன்றிற்கு உணவு பாதுகாப்பு துறையினரால் பூட்டு போடப்பட்டுள்ளது. வட இந்திய ஊழியர்களின் அநாகரிக செயலால் நிறைய உணவங்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி பொது மக்களிடையே இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் தான் குழந்தைகள் நோயாளிகள் அதிகம் சாப்பிடக்கூடிய ரஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் சிலர் அந்த ரஸ்க் மீது எச்சிலைத் துப்பியும் காலிற்கு அடியில் போட்டு மிதித்தும் பையில் அடைப்பது போன்ற வட மாநில வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள 10 ரஸ்க் தொழிற்சாலைகளிலும் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் பணி புரிவதால் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அங்கு ஒரு ரஸ்க் தொழிற்சாலையில் ஊழியர்கள் ரஸ்கை கீழே தரையில் கொட்டி அப்படியே பாக்கட்டில் அடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுகாதாரமே இல்லாமல் தயாரிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோவிற்கும் அதிகமான ரஸ்குகளை குப்பையில் கொட்டினர்.

மேலும் அவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமலும் இருந்துள்ளனர். மேலும் சிலர் கொரோனா தடுப்பூசியும் செலுத்தாமல் இருந்துள்ளனர். எனவே அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் உடனடியாக பூட்டு போட்டனர். மேலும் விசாரணைக்கு உரிமையாளரையும் அழைத்து சென்றனர்.

குழந்தைகள் மற்றும் நோயாளிகள் சாப்பிடும் ரஸ்கில் இவ்வளவு ரிஸ்க் உள்ளதை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply