முகநூல் FAKE IDக்காக பெற்ற குழந்தையை தூக்கி எறிந்த தாய்!!! prank கால் பறி போன மூன்று உயிர்கள்… கேரளாவை உலுக்கி எடுத்த அதிர்ச்சி சம்பவம்..

இந்தியா

முகநூல் prankகால் தற்போது மூன்று உயிர்கள் பறிபோன சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இந்த மூன்று உயிர்களில் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகாத ஆண் குழந்தையும் பலி ஆகி உள்ளது.

2021 ஜனவரி 5ஆம் தேதி கேரளம் கொல்லம் கல்லுவாக்கட்டு பகுதியில் இருக்கக் கூடிய ஒரு வீட்டிற்க்குப் பின் ஒரு பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அருகிலிருந்த மக்கள் அக்குழந்தையை மீட்டெடுத்தனர். மேலும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனடியாக அக்குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தையின் உயிர் பறி போனது.

இதனைத் தொடர்ந்து காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரனையை தொடங்கியது. முதல் கட்டமாக குழந்தை தூக்கி ஏறியப் பட்ட பகுதிக்கு அருகில் உள்ள வீட்டுப்பகுதிகளில் விசாரணை நடைபெற்றது. ஆனால் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. மோப்ப நாய் கொண்டு விசாரணையை மேற்கொண்டனர். எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனால் குழப்பமடைந்த காவல் துறையினர் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர். இதில் அந்த பகுதியில் இருந்த பெண்கள் அனைவருக்கும் DNA பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனைகளுக்கான முடிவுகள் சில மாதங்களுக்கு பின் ஜூன் 22 ஆம் தேதி அன்று காவல் துறைக்கு கிடைக்கின்றது.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதிக்கு நேரடியாக செல்கின்றனர். அங்கு சென்று ரேஷ்மா என்ற ஒரு பெண்ணை கைது செய்கின்றனர்.

இந்த சம்பவம் ரேஷ்மாவின் கணவர், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்ததுஇருந்தது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து ரேஷ்மா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

வாக்குமூலத்தில் அவர் முகநூலில் அறிமுகமான அனந்த் என்பவரை காதலித்ததாகவும் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப் பட்டதாகவும் கூறினார். மேலும் ஏற்க்கனவே தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால் இந்த குழந்தை தனது காதலுக்கு தடையாக இருக்கும் என்று எண்ணி தான் கர்ப்பம் ஆனதைக் கூட யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கர்ப்பம்மாக உள்ளது வெளியே தெரியாமல் இருக்க பெரிதான ஆடைகளையும் மேலும் வயிற்றை இறுக்கமாக கட்டியும் வைத்துள்ளார்.

இதில் மிகவும் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் ஜனவரி 4ம் தேதி அன்று அவரது குளியலறையில் குழந்தையை யார் துணையும் இன்றி பெற்றெடுத்து அருகிலிருந்த புதரில் வீசிவிட்டு வலி தெரியாமல் இருக்க வலி நிவாரணி மாத்திரையை சாப்பிட்டு விட்டு கணவர் அருகில் படுத்துள்ளார்.

இதனை அடுத்து கள்ள காதலன் அனந்தை காவல் துறையினர் தேடி விசாரணையை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல் ஒட்டு மொத்த கேரளத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காவல் துறையினர் ரேஷமாவிடம் பேசிய உரையாடலை முகநூல் நிறுவனத்திடம் இருந்து வாங்கி விசாரிக்கத் தொடங்கியது. இதில் ரேஷ்மாவிடம் பேசிய நபர் ரேஷ்மாவின் உறவினர் ஆர்யா என்ற பெண்ணின் சிம்மில் இருந்து பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஆர்யாவை விசாரிக்க காவல் நிலையத்திற்கு அவரை அழைத்தனர்.

ஆனால் ஆர்யாவும் அவரது உறவினர் க்ரீஷ்மா என்ற பெண்ணும் அன்று முதல் காணமல் போகின்றனர். அதன் பின் அருகிலிருந்த ஒரு ஆற்றில் ஆர்யாவும் கரீஷ்மாவும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து இருவர் குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஆர்யாவும் க்ரீஷ்மாவும் இணைந்து முகநூலில் அனந்த் என்ற பெயரில் போலி கணக்கு துவங்கி ரேஷ்மாவை காதலிப்பது போன்று prank செய்துள்ளனர். விளையாட்டிற்காக இவ்வாறு பேசினால் அவர் என்ன பதிலளிப்பார் என்பதை தெரிந்து கொள்வதற்காக இப்படி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்ட ரேஷ்மா தனது குழந்தையையே வீசும் அளவிற்கு கொடூரமாக நடந்துள்ளார்.

முகநூல் குறித்து விசாரணை நடத்தியதால் பயத்தில் ஆர்யாவும் க்ரீஷ்மாவும் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply