மீண்டும் இணையும் அஷ்வின் – ஷிவாங்கி ஜோடி!!! இணையத்தை கலக்க தயாராகும் ஆல்பம் சாங்…

மீண்டும் இணையும் அஷ்வின் – ஷிவாங்கி ஜோடி!!! இணையத்தை கலக்க தயாராகும் ஆல்பம் சாங்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற அஷ்வின் கதாநாயகனாகவும் அதே நிகழ்ச்சியில் பங்கு பெற்று அனைவரின் மனதை கவர்ந்த ஷிவாங்கி பாடகியாகவும் இணைந்து ஒரு ஆல்பம் பாடல் தயாராகி வருகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் தற்போது கிடைத்துள்ளது.

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பபட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது..
முதலில் ஒளிபரப்பான சீசன் 1 ஐ விட சீசன் 2 ற்கு ரசிகர் பட்டாளம் பெருகியது.
இரண்டாவது சீசனில் பங்குபெற்ற அஷ்வின் மற்றும் ஷிவாங்கிக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவர்களுக்கு அஷாங்கி ஆர்மி என்றும் பெயர்.

ஒரே மாதிரியான சீரியல்களை பார்த்து சலித்த மக்களிடையே இந்த சமையல் காமெடி நிகழ்ச்சி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதில் பங்குபெற்ற புகழ், அஷ்வின், ஷிவாங்கி ஆகியோர் சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் அனைவர் மனதிலும் இடம் பிடித்து விட்டனர்.

இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் தமிழர்களையும் ஈர்த்துள்ளது.மேலும் இளைஞர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அஷ்வின்- ஷிவாங்கி காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.

இவர்களின் ரசிகர் பட்டாளத்தை பார்த்து இருவருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிக் பாஸ் கவினுக்காக ஷிவாங்கி பாடிய அஸ்கு மாரோ பாடல் இணையத்தில் மிகவும் வைரல் ஆனது. அதே போல் அஷ்வின் நடித்த “குட்டி பட்டாஸ்” ஆல்பம் பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக ஒரு ஆல்பம் சாங்கிள் அஷ்வின் மற்றும் ஷிவாங்கி இணையப் போவதாக தகவல்கள் பரவின. அந்த ஆல்பம் மியூசிக்கின் பெயர் “அடிபொலி” எனவும் கூறி வந்தனர். இந்த ஆல்பத்தில் அஷ்வின் நடிப்பதாகவும் ஷிவாங்கி அவருக்கு பாட்டு பாடுவதாகவும் அமைந்துள்ளது.

இதனை அஷாங்கி ஆர்மி சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்..

அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலுக்காக காத்திருந்த நிலையில் ஷிவாங்கி அதனை பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது,நான் இதுவரையில் அஷ்வினுக்காக குக்வித் கோமாளியில் பல பாடல்களை பாடியிருக்கிறேன்.. ஆனால் இந்த பாடல் “ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவானது திங் மியூசிக்கின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply