மின்சார கார் மற்றும் பைக் ஆகியவற்றிற்கு 50% வரி தள்ளுபடி : சட்டப்பேரவையில் போக்குவரத்து அமைச்சர் கூறினார் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
நம் வாழும் பூமியில் சுவாசிக்கும் காற்று வாகனப்புகையினால் மாசுபடுவதைக்தடுக்க அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் 50% போக்குவரத்து வரி தள்ளுபடி கொடுக்க படும் என அமைச்சர் சந்திரப் பிரியங்காஅறிவித்தார் …

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மானியக் கோரிக்கையினால் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா, பெண்களுக்கு சனிக்கிழமைகளில் தனியாக போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம் கொடுப்பதற்கான நாளாக அறிவிக்கப்படும் என்று கூறினார் . மகளிர் மட்டும் தனித்து பயணிக்க சிசிடிவி அமைக்கப்பட்ட ரோஸ் நிற பேருந்துகள் பயணத்திற்கு கொண்டுவரப்படும் மற்றும் மின்சாரத்தில் செயல்படும் வாகனங்களின் பயன்பாட்டை கருதி சுற்றுசூழலில் காற்று மாசுபடுவதைக் குறைக்க, அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் 50% சாலை வரி தள்ளுபடி

கொடுக்கப்படும் இதையடுத்து இ-ரிக்சா பயன்பாட்டைக் கொண்டுவர மிகவேகமாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு திட்டத்தின் படி மக்களின் பயனத்திற்காக சுமார் 200 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவித்தார் …
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.