போனி கபூரை மொய்க்கும் ஓடிடி நிறுவனங்கள்.. வலிமைக்கு 200 கோடிக்கு மேல் பேரம் இணையத்தில் வைரல் !!

சினிமா

எச் வினோத் இயக்கத்தில் ஹீரோ அஜித் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பின் கடந்த வாரம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி இ ணை யத – ளத்தில் படு வைரல் ஆனது. மேலும் அதில் இடம்பெற்றுள்ள ஹீரோ அஜித்தின் அதிரடி சண்டை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அத்துடன் படம் பொங்கலுக்கு வர இருப்பதால் அதைக் கொண்டாட அஜித்தின் ரசிகர்கள் இப்போதிலிருந்தே பயங்கர ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் தியேட்டர்களில் ஜனவரி 10ம் தேதி வரை 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் எந்த நேரமும் இது நீட்டிக்கப்படும் என்றும் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவல் அதிகமாக இருந்தால் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலையும் ஏற்படலாம். அப்படி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும். இந்நிலையில் வலிமை படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்.
மேலும் பல ஓடிடி நிறுவனங்களும் வலிமை படத்தை தங்கள் தளத்தில் வெளியிடுவது குறித்து போனி கபூரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் வலிமை படத்திற்காக 200 கோடிக்கு மேல் வியாபாரம் பேசியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்காமல் அவர் மௌனம் காக்கிறார். இதன் காரணமாகவும் வலிமை திரைப்படம் வெளியாவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே தியேட்டரில் அனுமதித்தாலோ அல்லது முழு ஊரடங்கு பிறப்பித்தாலோ வலிமை திரைப்படம் பல நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இது தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாமல் வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தயாரிப்பாளர் உட்பட வலிமை படத்திற்காக காத்திருந்த அனைவரும் தற்போது பயங்கர கலக்கத்தில் இருக்கின்றனர்.

Leave a Reply