பைத்தியமா இவ??? ரொம்ப நேரம் நல்லா பேசிக்கிட்டு இருந்தாலே!!! மன நல காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன்!!

பைத்தியமா இவ??? ரொம்ப நேரம் நல்லா பேசிக்கிட்டு இருந்தாலே!!! மன நல காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

!

விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டிருக்க கூடிய நடிகை மீரா மிதுனை விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் ஒரு அதிரடி முடிவை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோசியல் மீடியாவில் ஒரு குறிபிட்ட இனத்தவரை குறித்து ஆபாசமாகவும் அருவருக்கும் படியாகவும் பேசியதால் மீரா மிதுன் மேல் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் போலீசார் அனுப்பிஇருந்த சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல் திடீரென தலை மறைவானார் மீரா மிதுன். அதன் பிறகு காவல் துறையினர் மீராவை தீவிரமாக தேடி வந்த நிலையில் கேரளாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவர் கைது செய்து சென்னை அழைத்து வரப் பட்டார்.

மேலும் இவரது காதலரான அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆக்கப்பட்டனர். அதில் மீரா மிதுனை 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் இவர் கேரளாவில் கைதானதிலிருந்தே காவல் துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமலே இருந்து வந்துள்ளார். கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த போது போலீசார் எனக்கு உணவு தரவில்லை மேலும் என் கையை உடைக்க முயற்சி செய்தனர் என கூச்சலிடுக்கொண்டே இருந்தார்.

அதன் பிறகும் விசாரணைக்கு என அழைக்கும் போதெல்லாம் அவரது அறையில் இருந்து மீரா மிதுன் கத்திக் கொண்டே இருந்துள்ளார். இவ்வாறு மீரா மிதுன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதால் சைபர் கிரைம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

மீரா மிதுன் விசாரணையில் இருந்து தப்பிக்க தான் இப்படி செய்கிறாரா அல்லது உண்மையில் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என மன நல மருத்துவர் மூலம் பரிசோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply