பெண்களின் மாதவிடாய் வலியை ஆண்கள் உணரும் நெகிழ்ச்சியான தருணம்!!! போதும் பா விட்டுடுங்க… கதறும் ஆண்கள். வீடியோ உள்ளே..

வைரல் வீடியோ

வயதுக்கு வரும் ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த மாதவிடாய் என்னும் பிரச்சனை பெரும் சவாலாகவே உள்ளது. ஒவ்வொரு பெண்களுமே இந்த மாதவிடாயின் காலத்தில் நிறைய சவால்களை சந்திக்கின்றனர். ஒவ்வொருவரின் உடலின் தகவமைப்பிற்கேற்ப இந்த மாதவிடாய் வலி வேறுபடுகின்றது.

இந்த மாத சுழற்சியின் போது பெண்கள் அனுபவிக்கும் வலி கொடுமையிலும் கொடுமையானது. இது ஒவ்வொருவரின் உடலிலும் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தும். சிலருக்கு தலை வலி அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இன்னும் சில பேருக்கு முதுகு வலி , தசை பிடிப்பு, கை கால்களில் சோர்வு என உடல் முழுவதும் சோர்வாக எந்த வேலையும் செய்ய முடியாமல் இருக்கும்.

இந்த மாதிரியான பிரச்சனைகள் கண்டிப்பாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும். இந்த மாதவிடாய் வலி எந்த அளவிற்கு இருக்குமென்றால் அன்றாட வேலைகளை செய்யகூட சிரமமாக இருக்கும். எந்த வலியாக இருந்தாலும் வீட்டு வேலையானாலும் சரி அலுவலக வேலையானாலும் சரி அதனை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.

உடல் வலிகளை தவிர உணர்வுகள் ரீதியான சில பிரச்சனைகளையும் பெண்கள் எதிர்கொள்கின்றனர். இந்த மாதவிடாய் சுழற்சியின் போது எப்போதும் எரிச்சலாகவே இருப்பர். காரணமே இல்லாமல் கோவமும் வரும். ஒரு விதமான சோகமாகவே இருப்பர். இந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். இன்னும் ஒரு சிலர் எப்போதும் பதற்றமாகவே இருப்பர்.

ஒரு சிலருக்கு உணவுகள் மீதான நாட்டம் அதிகமாவே இருக்கும். குறிப்பாக இனிப்புகள் சாப்பிட அதிகம் விரும்புவர். இந்த மாதிரியான பல பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர். இதில் அனைத்திலும் பெண்கள் அதிகமாக அவதிப்பட கூடியது எதுவென்றால் வயிற்று வலி தான். இதனை period cramps என்று குறிப்பிடுவர்.

என்ன பெரிய வயிற்று வலி… எங்களால் தாங்க முடியாதா என்ன? என்று கேள்வி கேட்கும் ஆண்களுக்காகவே தற்போது குஜராத்தில் ஒரு சோதனை ஒன்று நடத்தப்பட்டது. period cramps என்று சொல்லப்படும் இந்த வயிற்று வலி ஆண்களுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்றும் மேலும் அந்த வலியை அவர்களால் தாங்க முடியுமா என்றும் அந்த சோதனை நடத்தப்பட்டது.

அந்த வீடியோ இதோ!!!

இந்த சோதனையில் பெண்களின் மாதவிடாய் வலியை செயற்கையாக ஆண்களுக்கு உருவாக்கி அதனை உணரச் செய்கின்றனர். சில வினாடிகள் மட்டுமே வலியை தாங்கும் ஆண்கள் போதும் என்று நிறுத்தி விடுகின்றனர். சோதனையை முடித்த ஆண்கள் சில வினாடிகள் மட்டுமே எங்களால் அந்த வலியை தாங்க முடிந்தது. ஆனால் பெண்கள் கிட்ட தட்ட 5 நாட்கள் 24 மணி நேரம் இதனை தாங்கிக் கொள்கின்றனர் என்பது நம்ப முடியவில்லை எனவும் பெண்கள் மேல் சிறந்த மரியாதை வருகின்றது எனவும் கூறுகின்றனர்.

Leave a Reply