பிரியாணி மோகத்தால் உயிரை இழந்த மணமகன்!!! அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்…

தமிழ்நாடு

சமீபத்தில் பிரியாணிக்கென்று இளைஞர் மத்தியில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் பிரியாணி மீது கொண்ட அதீத மோகத்தால் இளைஞர் ஒருவர் தனது உயிரை இழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

காரைக்காலை அடுத்துள்ள கிராமத்தில் வசிப்பவர் சந்திர மோகன். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவர் எப்போதும் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் சந்திர மோகனுக்கும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெண்ணிற்கும் 26ம்
தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார் சந்திர மோகன்.

இந்நிலையில் சம்பவத்தன்று திருமண மகிழ்ச்சியில் அளவிற்கு அதிகமாக பிரியாணி சாபிட்டுள்ளார் சந்திர மோகன். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்திர மோகனை அவரது தாயார் எழுப்ப முயற்சித்த போது, அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பொழுது, பிரியாணி அளவிற்கு அதிகமாக சாப்பிட்டதன் காரணமாக மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்ப்பட்டு மாரடைப்பாக மாறி அவர் உயிர் இழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் அந்த ஊர் மக்களை மட்டுமல்லாமல் பிரியாணி விரும்பிகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Leave a Reply