பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக களமிறங்கும் GP முத்து!!! வேண்டாம் தலைவரே… உள்ள போகாதீங்க!! இணையத்தில் வைரலாகும் போட்டோ….

பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக களமிறங்கும் GP முத்து!!! வேண்டாம் தலைவரே… உள்ள போகாதீங்க!! இணையத்தில் வைரலாகும் போட்டோ….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பிக்க போவதற்கான அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விளம்பரத்தையும் தற்போது விஜய் tv வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த சீசனில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் போவார்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

இந்த சீசன் அக்டோபரில் ஆரம்பிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு சீசனுக்கும் 14 அல்லது15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த வகையில் இந்த சீசனில் GPமுத்து போட்டியாளராக பங்கேற்கிறார் என வதந்திகள் பரவின.

ஆனால் இப்போது அந்த வதந்திகளை உண்மையாக்கும் வகையில் GPமுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போடவில் அவர் பிக் பாஸ் வீட்டின் கேட்டின் முன் நிற்ப்பது போன்று உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் “வேண்டாம் தலைவரே.. உள்ள போகாதீங்க” என பதிலளித்து வருகின்றனர். ஆனால் சிலர் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு வரும்.. போய் தான் பாருங்களேன்.. எனவும் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் GP முத்து தான் சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி கொண்டு இருக்கிறார். அவரது பேச்சிற்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் அவருக்கு அவரது ரசிகர்கள் கடிதங்கள் அனுப்புவதும் அதனை அவர் படிப்பதும்.. அதற்காகவே அவருக்கு கிட்ட தட்ட 10 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் அவர் ஒரு தனியறையில் இருப்பது போன்று போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்காகவே ஹோட்டலில் தனிமை படுத்திக் கொண்டு உள்ளார் என கூறி வருகின்றனர்.

மேலும் இந்த சீசனில் சுனிதா, மைனா படம் சூசன், RJ வினோத், சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி, ஷகிலா மகள் நிலா போன்றோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் GP முத்து பிக் பாஸ் வீட்டிற்க்குள் செல்வாரா இல்லையா? யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள்? யார் வெற்றி அடைவார்? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளன.

முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து ரித்விகா, முகின் ராவ், ஆரி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply