பள்ளிகள் திறந்த 2 நாளில் மாணவர்களுக்கு கொரோனா!!! மீண்டும் மூடப்படுமா பள்ளி கல்லூரிகள்…

பள்ளிகள் திறந்த 2 நாளில் மாணவர்களுக்கு கொரோனா!!! மீண்டும் மூடப்படுமா பள்ளி கல்லூரிகள்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கடந்த 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

நெய்வேலி MNC நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் விருதாச்சலத்தில் இயங்கும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில் ஆசிரியர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில் இரு ஆசிரியர்களும் MNC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு சென்று பாடம் நடத்தாததால் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி பள்ளிக்கு வந்த அவருக்கு காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருந்ததாக தெரிகிறது.

பாதிக்கப்பட்டுள்ள மாணவி தனிமை படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 99 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாணவி இருந்த வகுப்பறை மட்டும் மூடப்பட்ட நிலையில் பள்ளி தொடர்ந்து செயல்பட்டது.

அரியலூரில் அரசு உதவி பெரும் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் விடுதி மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது தினசரி வீட்டில் இருந்து வரும் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால் அவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து 250 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதே போல் வரதராஜன் பேட்டையில் அரசு உதவி பெரும் பள்ளியில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மற்ற மாணவிகளுக்கு சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply