நீங்கள் பிறந்த மாதத்தை தேர்வு செய்யுங்கள்… உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!!!

பொழுதுபோக்கு

நம் பிறந்த மாதத்தை வைத்து நமது குணங்களை தெரிந்து கொள்வது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள ஒன்று. இது எண் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட முறை. மேலும் இதன் மூலம் நிறைய குணாதிசயங்களை வெளிப்படுத்த முடியும்.

கீழே உள்ள மாதத்தில் நீங்கள் பிறந்த மாதத்தை தேர்வு செய்யுங்கள்…

ஜனவரி
ஜனவரியில் பிறந்தவர்கள் தலைவர்களாக தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்களை சுற்றி உள்ளவர்களை மிகவும் அன்பாக பார்த்துக்கொள்வார்கள். பணத்தை செலவு செய்வதில் கெட்டிக் காரர்களாக இருப்பார்கள்.

பிப்ரவரி
பிப்ரவரியில் பிறந்தவர்கள் உறவுகளை மிக மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். மிருதுவான இதயம் கொண்டவர்கள் மேலும் சிறந்த பெற்றோர்களாக இருப்பார்கள். சிறு விஷியத்திற்க்கே மனம் உடைந்து விடுவார்கள் அனால் அதனை வெளியில் காட்டிக் கொள்வது சில நேரங்கள் மட்டுமே.

மார்ச்
மார்ச்சில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் ஒரு உறவில் இருந்தால் அதில் மிக ஆழமாக இருப்பார்கள். இவர்கள் அதிகமாக கனவு காண்பவர்களாக இருப்பார்கள். அமைதியாக இருக்க விரும்புவார்கள். பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள். முன் கோபம் அதிகம். இவர்களை சுற்றி நட்பு வட்டாரங்கள் அதிகமாக இருக்கும்.

ஏப்ரல்
ஏப்ரலில் பிறந்தவர்கள் smart ஆக இருப்பார்கள். மேலும் பிடிவாத குணம் கொண்டவர்கள். கற்பனைதிறன் அதிகம் உள்ளவர்கள். சிறந்த நண்பராகவும் சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருப்பார்கள். மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். அறிவுரை கூறுகிறவர்களாக இருப்பார்கள்.

மே
மேயில் பிறந்தவர்கள் திறமையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எழுத்தாளர்களாகவோ ஓவியராகவோ இசை திறமை உள்ளவர்களாகவோ இருக்க வாய்ப்புகள் உண்டு. மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். இயற்கையை ரசிப்பவர்களாக இருப்பார்கள்.

ஜூன்
ஜூனில் பிறந்தவர்கள் காதலில் சிறந்தவர்கள். மிகவும் romantic ஆனவர்கள். கனிவான உள்ளம் கொண்டவர்கள். சிறிது பொறாமையும் உண்டு. தனது வேடிக்கையின் மூலம் மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள். எப்போதும் புதிய அனுபவங்களை பெற விரும்புவார்கள். சிறிது சோம்பேறித்தனமாகவும் இருப்பார்கள்.

ஜூலை
ஜூலையில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள். தனிமையில் இருக்க விரும்புவார்கள். மன்னிக்கும் குணம் கொண்டவர்கள். எளிதில் மனம் உடைந்து விடுவார்கள். ஆனால் தன்னை காயப்படுத்தியவர்களையும் பழிவாங்கும் எண்ணம் இருக்காது.

ஆகஸ்ட்
ஆகஸ்டில் பிறந்தவர்கள் மிகவும் அக்கறை கொண்டவர்கள். மிக சுறுசுறுப்பானவர்கள். எப்போதும் அவர்களை சுற்றி மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துகொள்வார்கள். தலைவர்களாகவும் தகுதி கொண்டவர்கள். அவர்களுடைய துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். கோபத்தில் தவறான’ முடிவு எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

செப்டம்பர்
செப்டெம்பரில் பிறந்தவர்கள் ஒழுக்கமுடயவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய திட்டத்தின் படி நடக்காவிட்டால் மனம் சோர்ந்து போவார்கள்.
இவர்கள் அவ்வளவு சீக்கிரம் எதையும் மறக்க மாட்டார்கள். வாழ்க்கை துணைக்கு மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார்கள்.

அக்டோபர்
அக்டோபரில் பிறந்தவர்களுக்கு வேண்டுமென்பது கிடைத்து விடும். பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள். பிடிவாத குணத்தால் நினைத்தை சாதிப்பவர்கள். நண்பர்கள் இல்லாமல் வாழ முடியாது. அழகாக இருப்பார்கள். பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

நவம்பர்
நவம்பரில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள். பண பிரச்சனைகளால் சில நேரம் வாழ்கையில் கீழே இறங்கினாலும் கடின உழைப்பால் மேலே வருவார்கள்.
புதிய சிந்தனைகள் படைத்தவர்கள். தனிமையை விரும்புவார்கள். உறவில் அவ்வளவு பெரிய நம்பிக்கை இல்லாதவர்கள்.

டிசம்பர்
டிசம்பரில் பிறந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள். சில நேரங்களில் பொறுப்புகளை கவனிக்காமல் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தனக்கென லட்சியம் கொண்டவர்கள்.

Leave a Reply