நிச்சயம் ஆனதை மறைத்த நயன்தாரா!!! – மறைத்ததர்க்கான காரணம் இதோ… மேலும் திருமணம் குறித்த விளக்கம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா மற்றும் நானும் ரௌடி தான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சமீப காலமாக காதல் பறவைகளாக திரையுலகில் சுற்றி வருகின்றனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்பாக முதலில் சிம்புவை காதலித்தார். ஆனால் அது சிறிது காலமே.. அதன் பிறகு நடிகரும் கோரியோகிராபருமான பிரபுதேவாவை காதலித்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகிலும் முந்தய இரு காதல்களை விட விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் நயன்தாரா மிகவும் உறுதியாக உள்ளார். இவர்கள் இருவரின் திருமணம் பற்றிய கேள்விகளை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் எழுப்பிய வண்ணம் உள்ளனர். சிறிது நாட்களுக்கு முன்னர் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்து விட்டதாக வதந்திகள் பரவின.

இந்த நிலையில் இதுகுறித்து விக்னேஷ் சிவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அது குறித்து விளக்கமளித்த விக்னேஷ் சிவன், சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இதுவரையில் 22 முறைக்கும் மேலே திருமணம் நடத்தி விட்டனர் என நகைச்சுவையாக கூறினார். ஆனால் நாங்கள் எங்கள் வேலைகளில் கவனமாக இருக்கிறோம். மேலும் எங்களுக்கு என சில குறிகோள்கள் உள்ளன. அதனை நிறைவேற்றிய பின்னரே திருமணம் செய்து கொள்வோம். அதேபோன்று எங்கள் காதலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அந்தக் காதல் மிக அழகாக உள்ளது. ஒருவேளை அந்த காதலில் சலிப்பு ஏற்ப்பட்டால் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறி உள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன், காதலி நயன்தாராவுடன் இருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். அந்த படத்தில் நயன்தாரா, அவரது கையில் ஒரு மோதிரம் அணிந்திருந்தவாறு இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என கூறி வந்தனர். இது குறித்து இருவர் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அது குறித்து ஒரு tv நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விளக்கமளித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நயன்தாராவிடம், கையில் அணிந்திருக்கும் மோதிரம் மிக அழகாக உள்ளது என கூறினார். அதற்கு பதில் அளித்த நயன்தாரா, இது தனது நிச்சயதார்த்த மோதிரம். மேலும் அவருக்கும் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறினார். மற்றுமல்லாமல் கொரோனா லாக்டவுன் காரணமாக நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்ததாக கூறினார். ஆனால், கண்டிப்பாக திருமணத்தை ரசிகர்கள் அனைவருக்கும் கூறிவிட்டு தான் பண்ணுவோம் என்றும் சொன்னார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.