நஸ்ரியாவை முதுகில் தூக்கி செல்லும் கணவர் ஃபகத்தின் வீடியோ.. 7வது திருமண நாளையொட்டி கணவருக்காக வெளியிட்ட பதிவு!!

சினிமா

முதலில் தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் பிரபல நடிகையானவர். மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு நிவின் பாலியுடன் இணைந்து 2013ல் ‘நேரம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் என நடித்த அனைத்து படங்களிலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அதன் பிறகு மலையாள முன்னணி இயக்குனரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நஸ்ரியாவிற்கு 2014 ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன பிறகு நீண்ட காலம் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்திருந்தார். தற்போது தனது கணவருடன் டிரான்ஸ் என்ற படத்தின் மூலம் comeback கொடுத்துள்ளார்.

அவ்வாறு இருக்கையில் இந்த மாதத்தில் அவர்களது 7வது திருமணநாளை கொண்டாடியுள்ளனர். எனவே வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் இருவரும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். அதில் நஸ்ரியா, அவரை பகத் முதுகில் உப்பு மூட்டை தூக்கி சென்றவாறு உள்ள வீடியோவை பகிர்ந்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், அதில் நீ என்னிடமிருந்து எப்போதும் தப்பிக்க முடியாது. 7வது திருமணநாள் வாழ்த்துக்கள், எனவும் மேலும் சில வரிகளுடன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள சினிமா நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஒரு சில படங்கள் மட்டுமே தமிழில் நடித்தாலும் தனது நடிப்பு மற்றும் முக பாவனைகளின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்துவிட்டார்.
மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள முன்னணி நடிகைகளை விட இவருக்கு தமிழில் ரசிகர் கூட்டம் பெரியது.

நஸ்ரியா பதிவிட்ட வீடியோ இதோ!!

திருமணதிற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அந்த படத்தின் பெயர் அண்டே சுந்தரனிக்கி எனவும், மேலும் இந்த படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக தமிழ் படத்தில் எப்போது நடிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Leave a Reply