நரை முடி நிரந்தரமாக கறுப்பாகும் அதிசயம்!!! ஒரு வாரம் போதும்.. முயற்சி செய்து பாருங்கள்.. news v tamil/beauty tips

அழகு குறிப்பு

இளநரை முடிகளை ஒரே வாரத்தில் கருமயாக்கக்கூடிய ஒரு எண்ணையை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். இது மிகவும் எளிதாக கிடைக்கக் கூடியதே. இதனை பெரிய மளிகைக் கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய பின் இதனை நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:
200 கிராம் எண்ணெய் செய்வதற்கு 2 கரண்டி கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். இதனை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் பூச்சி இல்லாத நல்ல மருதாணி இலையை ஒரு கை அளவு எடுத்துக் கொள்ளவும். இதனை தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பை ஆன் செய்து கடாயை வைக்கவும். பின் 200 கிராம் எண்ணையை கடாயில் ஊற்றவும். எண்ணெய் சூடாகும் வரை விடவும். பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்த கருஞ்சீரகத்தை சேர்க்கவும். இதனை சேர்த்ததும் நன்றாக பொரிய ஆரம்பிக்கும்.

இளநரையை கருமையாக மாற்றுவதில் கருஞ்சீரகதிற்கு பெரும் பங்கு உண்டு. முடி கொட்டுவதை கூட நிறுத்தும் வல்லமை உண்டு. நரைமுடியை ஒரே வாரத்தில் போக்கும் குணம் கொண்டது.

கருஞ்சீரகம் நன்றாக எண்ணையில் பொரிந்த பின்னர் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்த மருதாணியை சேர்க்கவும். மருதாணி இலை நன்றாக பொரிந்து நுரையெல்லாம் அடங்கும் வரை நன்றாக கொதிக்க விடவும். தற்போது எண்ணெய் பச்சை நிறத்தில் இருக்கும்.

இப்போது இந்த எண்ணையில் கரிசிலாங்கண்ணி பொடி அரை கரண்டி சேர்க்கவும். கரிசிலாங்கண்ணி இலை கிடைப்பதாக இருந்தால் மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இல்லையெனில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கரிசிலாங்கண்ணி பொடியை பயன்படுத்தலாம்.

இதனை சேர்த்த பின் எண்ணையின் நிறம் கருமையாக மாறி விடும். இப்போது அடுப்பை off செய்து விடலாம். பிறகு நன்றாக ஆற வைத்த பிறகு இந்த எண்ணையை வடி கட்டி பயன்படுத்தலாம்.

இந்த எண்ணையை மிக சுலபமாக 5 நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். இதில் சேர்த்த பொருள்களும் மிக எளிமையான குறைந்த அளவு பொருட்களே. இந்த 3 பொருட்களும் இளநரையை போக்குவதில் சிறந்தது ஆகும். இந்த என்னையானது முடி உதிர்வதை கூட நிறுத்தி விட்டு முடி வளர்வதை தூண்டும்.

இதனை ஒரு வாரம் பயன்படுத்தினாலே போதும் அனைத்து நரை முடிகளும் கருமையாக மாறி விடும். இதனை தினமும் காலையில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேலைக்கு செல்வோர் காலையில் தேய்க்க முடியாவிட்டால் இரவு தேய்த்து விட்டு காலையில் குளித்துக் கொள்ளலாம்.

Leave a Reply