நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக மோட்டிவேஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் ரஜினி முருகன், ரெமோ போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர் தற்போது முன்னணி ஹீரோயின் களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது சமூக வலைதள பக்கத்தில் தனது உயிர்த்தோழியான சமந்தாவின் உடல்நலம் குறித்து மோட்டிவேஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது ஹீரோயின் சமந்தா சமீபத்தில் தனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இன்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக அறிக்கை பகிர்ந்து அத்துடன் உருக்கமான பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

அவரது பதிவிற்கு ரசிகர்களும் பல திரை பிரபலங்களும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை தொடர்ந்து சமந்தாவின் தோழியான ஹீரோயின் கீர்த்தி, அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ‘உனக்கு நிச்சயம் அதிக சக்தி கிடைக்கும். விரைவில் வலிமையுடன் நலம்பெற்று திரும்புவாய்’ என்று மோட்டிவேஷனலாக தெ ரிவி த் து ள் -ளா ர். அது தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.