” துள்ளுவதோ இளமை” என்ற படத்தில் நடித்த நடிகையா ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

சினிமா

JEYA டிவியில் இனிய வாழ்த்துக்கள், துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் ரேகா நாயர். சினிமா- டிவி சீரியல்களிலும் நடித்துள்ள ரேகா நாயர் ஒரு எழுத்தாளரும் கூட. பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்தப ேட்டியில், நான் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக 13 வருடங்களாக செயல்பட்டு வருகிறேன். அதோடு, சினிமா மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தேன்.

ஆனால் நடிப்பவர்களுக்கு சரியான மரியாதை, வரவேற்பு என்பது கிடைப்பதில்லை. அதனால் சமீபகாலமாக நான் நடிப்பதில் இருந்து விலகி விட்டேன். JEYA டிவியில் இனிய வாழ்த்துக்கள், துள்ளுவதோ இளமை, மகளிர் மட்டும் ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன். இதில் துள்ளுவதோ இளமை முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான நிகழ்ச்சி. வெறும் ஜாலி அரட்டையாக இல்லாமல் அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உரம் போடும் நல்லதொரு களமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஏராளமானோர் இதில் ஆர்வமுடன் பங்கேற்று வரு கி றா ர் – க ள்.

அதேபோல், மகளிர் மட்டும் பெண்களுக்கான நிகழ்ச்சி. பெண்கள் தங்களது கருத்துக்களை, அனுபவங் களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இதுவும் சமூக நோக்கமுள்ள நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு மனதளவில் திருப்தியை கொடுத்துள்ளது. இதன்மூலம் இன்னும் நிறைய நல்ல விசயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஆசைப்படுகிறேன். மேலும், நான் பிறப்பால் மலையாளி என்றாலும், படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். தமிழ் மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழை நான் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன்.

கதை, கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். தற்போது ஒரு கவிதை தொகுப்பு வெளியிடும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன் என்கிறார் ரேகா நாயர்.இந்நிலையில், மொட்டை மாடியில் கருப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் போஸ் கொடுத்துள்ள அவரது சில போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Leave a Reply