கரூரில் தவறி கீழே விழுந்த காதலியை கண்ணிமை போல அவரது காதலன் காத்து வருவது உண்மைக் காதல் இந்த காலத்திலும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

கரூர் நகராட்ச்சிக்கு உட்பட்ட s.வெள்ளாளப்பட்டி இந்திரா காலனியில் கண்மணி என்ற இளம்பெண் வசிக்கிறார். இவருக்கு காயத்த்ரி என்ற தங்கையும் உண்டு. இவர்கள் இருவரும் சிறு வயாதாக இருக்கும்போதே தாயை விட்டு இவர்களின் தந்தை பிரிந்து சென்று விட்டார். இதனால் இவர்கள் தங்களது தாயுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே இவர்களது தாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். அதன் பின் பாட்டி தான் கூலி வேலை செய்து தனது பேத்திக்களை வளர்த்து வந்துள்ளார். கரூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றுள்ளார் கண்மணி. காயத்ரி தற்போது பி.எஸ்.சி வேதியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கண்மணி வீட்டிற்கு அருகில் நடந்து சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போதிலிருந்து கண்மணிக்கு வாய் பேச முடியாமல் போய் விட்டது. கையால் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஆனது. இதனால் தனது சுய வேலைகளையும் கூட செய்ய முடியாத நிலையில் அவதிப் பட்டு வந்துள்ளார்.
தனது பேத்தியின் நிலையைக் கண்டு வேதனையடைந்த பாட்டியும் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இரண்டு இளம் பெண்களும் தனிமையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கண்மணியும் அவரது உறவினரான தினேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது கண்மணிக்கு வாய் பேச நடக்க முடியாமல் போனாலும் தான் கொண்ட காதலில் உறுதியாக இருந்து கண்மணிக்கு எல்லாமுமாக இருந்து பார்த்துக் கொள்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு அழகு இழந்து, மெலிந்து போன நிலையில் கண்மணி இருந்தாலும் தான் கொண்ட காதலில் உறுதியாக உள்ளார் தினேஷ்.

மேலும் கண்மணியை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்ச்சிகளும் செய்து வருகிறார். தற்போது கண்மணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனாலும் கண்மணிக்கு எந்த முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய பண வசதி இல்லாததால் மருத்துவம் பார்ப்பதை விட்டு வீட்டிலேயே கண்மணி இருந்து வருகிறார்.
தற்போது தினேஷ் எம்.எஸ்.சி முடித்துவிட்டு காவலர் தேர்வு எழுதியுள்ளார். அடுத்த உடல் தகுதி தேர்வுக்காக காத்திருக்கிறார். தனக்கு வேலை கிடைத்து விட்டால் கண்மணியை தனது கண்ணின் மணியைப் போல பார்த்துக் கொள்ளப் போவதாக தினேஷ் கூறுகிறார்.

கண்மணியின் தங்கை காயத்ரி டெக்ஸ்டைளில் வேலை பார்க்கிறார். எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்கும் இவர்களுக்கு அரசும் எதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் வைக்கின்றனர்.