தாய்ப்பாலில் தயாரிக்கப்படும் நினைவுப்ப் பரிசுகள்!!! மக்களிடம் வரவேற்ப்பை பெற்ற தாய்ப்பால் ஆபரணங்கள்…

தாய்ப்பாலில் தயாரிக்கப்படும் நினைவுப்ப் பரிசுகள்!!! மக்களிடம் வரவேற்ப்பை பெற்ற தாய்ப்பால் ஆபரணங்கள்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

உறவுகளின் உணர்வுகளில் பரிசுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அன்புக்குரியவர்களின் பரிசுகள் உயர்வானதாக இருக்கும். அதிலும் அது தாய்ப்பாலில் அமைந்து இருந்தால் ஈடு இணையே இல்லாத பரிசாக அமைந்து விடும்.

இந்த நிலையில் தாய்மை பருவத்தின் நினைவாக தாய்ப்பாலில் செய்யப்படும் ஆபரணங்கள் தாய்மார்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

பிறந்தநாள் தொடங்கி நினைவு கூறத்தக்க ஒவ்வொரு நாளிலும் பரிசுகள் பகிரப்படுவது வழக்கம். அவை காகிதத்தில் செய்ததாக இருந்தாலும் பொக்கிஷங்களாக மாறி விடுகின்றன. அந்த வகையில் விருப்பமானவர்களுக்கு பரிசுகளை தேர்வு செய்ய ஒவ்வொருவரும் மெனக்கிடுகின்றனர்.

இந்த வரிசையில் பெண்கள் அனைவரும் பெருமையாக நினைக்கும் தாய்மை பருவத்தின் நினைவாக தாய்ப்பாலைக் கொண்டு ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.

சென்னையை சேர்ந்த ப்ரீத்தி என்பவர் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளக் கூடிய வகையில் மோதிரம் உள்ளிட்ட வடிவங்களில் தாய்ப்பாலைக் கொண்டு ஆபரங்களாக தயாரிக்கிறார்.

தாய்ப்பால் மட்டுமின்றி குழந்தையின் தொப்புள்கொடி, தலைமுடி, நகங்கள், பற்கள் என ப்ரீத்தியின் கைவண்ணத்தில் தாய்மை, பரிசாக உருவெடுக்கின்றது.
இவற்றினை தாய்மார்களின் விருப்பதிர்க்கேற்ப தங்கம், வெள்ளி, முத்து என எல்லா வகையிலும் வடிவமைத்து தருகிறார் ப்ரீத்தி.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் பெரிதாக பேசப்பட்டாலும் தாய்மை அடையும் பருவத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய அந்த தாய்ப்பாலை சேமித்து, வாழ்நாள் முழுவதும் நினைவுகளை பகிர்ந்துகொள்ள இது போன்ற ஆபரணங்களின் மூலம் புது முயற்ச்சியை முயற்ச்சிக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply