தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஹீரோ என்றால் அது ஹீரோ தல மட்டுமே. இவர் ஹீரோ மட்டுமல்லாமல் சிறந்த பைக் ரேஸர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர் பைக் ஓட்டும் ஸ்டைல் மற்றும் இவரது நடை போன்றவற்றிற்காகவே தல துக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தல தை தல என அவரது ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தல ரசிகர்கள் தயாராக உள்ளனர். தற்போது தல நடிப்பில் வினோத் இயக்கி வரும் வலிமை படத்திற்காக அஜீத் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தல தை திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலானதால், வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இதேபோல் இப்படத்தின் நாங்க வேற மாதிரி எனும் முதல் பாடலும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் மேக்கப் கலைஞர் ஒருவர் தல தைப் போலவே மேக்கப் செய்து அசத்தி உள்ளார்.
தல ரசிகர்களை கவரும் விதமாக மேக்கப் செய்யும் இளைஞர் ஒருவர் அச்சு அசல் தல போலவே மேக்கப் மூலம் தன் முகத்தை மாற்றி உள்ளார். அதுவும் தல தின் நான்கு கெட்டப்புகளை அவர் செய்து அசத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோவை தல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
தல குறித்து ஏதேனும் ஒரு சிறிய தகவல் வந்தாலே அன்றைய தினம் சமூக வலைதளங்களை அலறவிடும் அளவிற்கு தல ரசிகர்கள் அலம்பல் செய்வார்கள். இப்படி ஒரு வீடியோ கிடைத்தால் சும்மா விடுவார்களா? எனவே இந்த வீடியோ தல ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.