“தல அஜித் ஐயோ”….’காசேதான் கடவுளடா’ பாடலில் மஞ்சு வாரியர் வாய்ஸே காணும்? உண்மை விவரம் இதோ….

சினிமா

இயக்குனர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ஹீரோயின் மஞ்சு வாரியர். அடுத்ததாக, அவரது நடிப்பில் பொங்கல் விடுமுறைக்கு முன்னதாக JANAVAR 12 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள அஜித் குமார் நடித்த ‘துணிவு’ படம் அவரது 2-ம் தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டை குறிக்கிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹீரோயின் மஞ்சு வாரியர். இப்பொது, துணிவு ரிலீஸுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், படத்தின் பல அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று துணிவு படத்தின் “காசேதான் கடவுளடா” என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

மஞ்சு வாரியரும் வைஷாக் பாடிய இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இது, மஞ்சு வாரியர் பாடிய முதல் தமிழ்ப் பாடல் என்பதால், அவரது குரலைக் கேட்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர். அட ஆமாங்க… இந்த பாடலை மஞ்சு வாரியரும் பாடுவது VIDEO வில் கட்டப்பட்டு இருந்தாலும், பாடல் முழுவதும் வைஷாகின் குரல் மட்டுமே கேட்கப்படுவதால் அவரது குரல் கேட்கவில்லை.

அவரது, குரல் காணாமல் போனதை அறிந்த சில நெட்டிசன்கள் மஞ்சு வாரியரை ட்ரோல் செய்யத் தொடங்கினர். மேலும், மீம் கிரியேட்டர்களும் பலரும் அவருக்காக மீம்ஸ்களை செய்து, இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

இதனை தொடர்ந்து, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து டிவிட்டரில், “துணிவு படத்திலிருந்து வெளியாகியுள்ள “காசேதான் கடவுளடா” பாடலில் எனது குரல் கேட்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் கவலைப்பட வேண்டாம்,

நான் பாடியது VIDEO பாடலில் இடம் பெரும் என்று தெரிவித்ததோடு, உங்கள் வேடிக்கையான ட்ரோல்களை பார்த்து ரசித்தேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Reply