தம்பியிடம் வீடியோ எடுக்க போனை வாங்கிவிட்டு விட்டு மனைவிக்கு புருஷன் செய்த மோசமான செயல்!!

தம்பியிடம் வீடியோ எடுக்க போனை வாங்கிவிட்டு விட்டு மனைவிக்கு புருஷன் செய்த மோசமான செயல்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கல்யாணம் ஆகி 2 ஆண்டு_கள் பிள்ளை இல்லாததால், மனைவியை தனது சகோதரனை வைத்து சீரழிக்கவிட்டு, அதனை கணவன் காணொளி எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், போபால் மாவட்டத்தில் உள்ள குங்கா பகுதியில் நடந்தேறியுள்ளது.

சர்ஜாபூரில் வசிக்கும் 21 வயதாகும் பாதிக்கப்பட்ட பெண், கல்யாணம் ஆகி 2 ஆண்டு_கள் ஆன நிலையில் பிள்ளை இல்லாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஜூலை 21-ஆம் திகதி அவரது கணவர், ஒரு சாமியாரை நேரில் சென்று கண்டு அவரிடம் பிரச்சினையை கூறினால், நமக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்று கூறி, தனது மனைவியை, குங்கா – கடம்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இணைக்கு தனது சகோதரனையும் (24) அழைத்துச் சென்றுள்ளார். ஓரிரு தினங்_கள் அங்கு தங்கியிருந்த நிலையில், அந்த சாமியார் வீட்டிற்கே வந்து பூஜை செய்வார் என கூறியுள்ளார்.

இதனை நம்பிக்கொண்டு அப்பெண் இருந்த நிலையில், அப்பெண், அவரது கணவர் மற்றும் அவரது சகோதரர் வீட்டிற்குள் பேசிக்கொண்டு இருந்த நிலையில், வீட்டின் வெளிப்புறமாக தாழ்ப்பாழ் போடப்பட்டுள்ளது.

பின்னர், கணவனே சகோதரன் தனது மனைவியை கற்பழிக்க உதவி செய்துள்ளார். எல்லாம் ஒரு பிள்ளைக்காகத் தான் என கூறிக்_கொண்டு அங்கு நடப்பதை கணவன் தனது செல்போனில் காணொளி எடுத்துள்ளார்.

ஜூலை 26-ஆம் திகதி விட்டிற்கு திரும்பியவுடன், நடந்ததை அப்பெண் தனது மாமியாரிடம் கூறியுள்ளார். அதற்கு ஒரு பதற்றமும் இன்றி, இதை வெளியே யாரிடமாவது சொன்னால், வீட்டை விட்டு துரத்திவிடுவோம் என பாதிக்கப்பட்ட பெண்ணையே மிரட்டியபோது தான் தெரிந்தது, குடும்பமே இதனை திட்டமிட்டு செய்துள்ளது என்று..,

பின்னர், அப்பெண் ஒருவழியாக தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறியுள்ளார். அதன்பிறகு ஜுலே 31-ஆம் திகதி அப்பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், குங்கா பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது அம்மா மற்றும் சகோதரர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply