தந்தையை கொலை செய்த சிறுமி !!! தவறாக நடக்க முயன்றதால் தற்காப்பு கொலை… news v tamil/tamil news

தமிழ்நாடு

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாக அரங்கேறிய வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிராக இந்த வன்முறை அதிகரித்துள்ளது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பெற்றோரே குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை தற்காப்பிற்காக கொலை செய்த சிறுமி வழக்கு எதுவுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கோவில்புரையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திங்கள் கிழமையன்று அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் இரண்டு பேரிடம் விசாரித்து வந்த நிலையில் வழக்கில் எதிர் பாராத திருப்பம் ஏற்ப்பட்டது.

வெங்கடேசனின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரது மூத்த மகள் சென்னையில் பணி புரிந்து வருகிறார். 12 ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் தனது தந்தை வெங்கடேசனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் போதையில் இருந்துள்ளார். மது அருந்திவிட்டு தனது இளைய மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக காய்கறி நறுக்கும் கத்தியால் தந்தையை குத்தியுள்ளார். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வெங்கடேசனின் மார்பில் 11 இன்ச் வரை இறங்கிய கத்தி முதுகுவடத்திலும் இரண்டு சென்டிமீட்டர் வரை சென்றதாக உடற்கூர்ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தந்தையை கொன்ற சிறுமியின் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை எனவும் இந்திய தண்டனை சட்டப்படி தர்காப்பிற்காகவே கொலை செய்ததால் சிறுமி விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற்றுள்ள இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சோசியல் மீடியாவில் அந்த சிறுமி மற்றும் காவல் துறையினருக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply