தங்கமீன்கள் என்ற படத்தில் நடித்த ஹீரோயின்னா இது ரசிகர்களை திணற வைத்த புகைப்படம் இதோ !!

தங்கமீன்கள் என்ற படத்தில் நடித்த ஹீரோயின்னா இது ரசிகர்களை திணற வைத்த புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கடந்த 1983 ஆம் வருடம் டெல்லியில் பிறந்தவர் நடிகை பத்மபிரியா. மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் சிறந்த நடிகையாகவும் தன்னை தரம் உயர்த்திக் கொண்டார். சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்கு திரைப்படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.


இந்த திரைப் படத்திலும் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பத்மபிரியா. அதனைத் தொடர்ந்து பட்டியல், மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தங்கமீன்கள், பிரம்மம் உள்ளிட்ட எழு திரை படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்கும் கொண்டிருந்தாலும் ஏனோ இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழை விட மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுதும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளிராக பணியாற்றி வருகிறார். கடந்த 2014ஆம் வருடம் ஜாஸ்மின் ஷா என்பவரை கல்யாணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்கள். காரணம் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே பத்மப்ரியா நடிப்பார் என்பதுதான். இந்நிலையில் இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கருப்பு நிறத்திலான குடியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் இவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள்.. மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. பத்மபிரியாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply