சென்னையில் ரசாயனம் தடவி விற்க முயன்ற 200 கிலோ மீன்கள் பறிமுதல்!!! அதிர்ச்சியில் பொதுமக்கள்…

தமிழ்நாடு

மீனிற்கு எப்போதுமே தனி பிரியர்கள் உண்டு. மற்ற அசைவ உணவுகளை விட மீனை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அசைவ உணவுகளில் அதிகமான சத்து இருப்பதும் மீன்களில் தான். இப்படி மீன்களை குறித்து நாம் என்ன தான் பேசினாலும் அனைத்திலிருந்தும் லாபம் பார்க்கும் நவீன கால வியாபார உலகம் மீன்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன??

தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் பார்மலின் தடவிய மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் அசைவப்பிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை சிந்தாதிரி பேட்டையில் தனியார் மீன் குடோனில் ஆய்வு நடத்த்கிய உணவு பாதுகாப்புத் துறையினர் ரசாயனம் தடவி விற்க முயன்ற 200 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்தனர்.

KKSNCO என்ற தனியாருக்கு சொந்தமான மீன் குடோனில் ஆந்திர மாநிலத்தில் பல நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்ட மீன்களை பதுக்கி வைத்திருந்ததும் பார்மலின் ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்ப்பனைக்கு அனுப்ப முயன்றதும் கண்டுபிடிக்க பட்டதால் பறிமுதல் செய்யப் பட்டது.

இது குறித்து உணவுத்துறை அலுவலர் கூறியதாவது, இது போன்று மீன் வியாபாரிகள் யாரேனும் பார்மலின் ரசாயனம் தடவையோ அல்லது கெட்டுப் போன மீன்களையோ விற்க முயல்வது கண்டுபிடிக்கப் பட்டால் அவர்களது கடை சீல் வைக்கப்படும். மேலும் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதே போல் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்ப்பனைக்கு வைக்கப்படிருந்த 50 கிலோ கெட்டுப் போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கடலில் பிடிக்கபட்ட மீன்கள் நீண்ட நேரம் அல்லது நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மலின் ரசாயனம் தடவப் படுகிறது. பார்மலின் என்பது இறந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்க பயன்படுத்தப்படுவது. இது மனித உடலுக்குள் சென்றால் புற்று நோய், இதய கோளாறு, கடும் செரிமான கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்ப்படுத்தும் என்கின்றனர்.

கேரளா, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் பிடிக்கப்பட்ட மீன்களில் இந்த ரசாயனம் தடவப்பட்டு விற்ப்பனைக்கு வருகின்றன.

மேலும் சென்னையில் பார்மலின் ரசாயனம் தடவிய மீன்கள் விற்க்கபடுகிறதா என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பரிசோதனைக்காக 12 வகையான மீன்களை எடுத்துச் சென்றனர்.

Leave a Reply