சூப்பர் ஸ்டாரின் பேவரைட் ஹீரோயின்.. தூக்கில் தொங்கிய பரிதாபம் இணையத்தில் வைரல் !!

சினிமா

இயக்குனர் பாலச்சந்தர் அவர்களால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே பல திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் ஹீரோயின் படாபட் ஜெயலட்சுமி. சுப்ரியா ரெட்டி என்னும் பெயருடைய இவர் பாலசந்தரால் ஜெயலட்சுமி என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.

1972ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அந்த திரைப்படத்தில் இவர் அடிக்கடி படாபட் என்ற வசனத்தை கூறுவார். இதனாலேயே அவர் ரசிகர்களால் படாபட் ஜெயலட்சுமி என்று அழைக்கப்பட்டார்.

அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, சிவகுமார் போன்ற அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து உள்ளார். அதிலும் super ஸ்டாருடன் இணைந்து இவர் நடித்த ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் திரை – ப் ப டங் க ள் பல விருதுகளை வாங்கிக் குவித்தது.


super ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முறை, தன்னுடன் நடித்த ஹீரோயின் களிலேயே தனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் என்று இவரை மிகவும் புகழ்ந்து பேசி இருந்தார். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

சுமாரான அழகுடன் நடிக்க வந்து, தன் திறமையின் மூலம் பல சாதனைகளை புரிந்த இவருக்கு தனிப்பட்ட வாழ்வு கொடுமையாக இருந்தது. குங்குமம் கதை சொல்கிறது என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது சக நடிகரான சுகுமார் உடன் இவர் காதல் வயப்பட்டார்.

சுகுமார் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அண்ணன் மகன் ஆவார். ஜெயலட்சுமி, சுகுமாரை தீவிரமாக காதலித்து ரகசியகல்யாணம் செய்து கொ – ண் டா ர். இவர்களின் திருமணத்திற்கு பிறகுதான் ஜெயலட்சுமிக்கு, சுகுமார் ஏற்கனவேகல்யாணம் ஆனவர் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது.

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும், பல சிக்கல்களும் எழுந்துள்ளது. மேலும் சுகுமார் தன்னை ஏமாற்றியதை தாங்க முடியாத ஜெயலட்சுமி 1980 ஆம் வருடம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ – ண் டா ர். அப்பொழுது அவருக்கு வயது 22 மட்டுமே.
சினிமாவில் பல தைரியமான காட்சிகளில் நடித்து புகழை அள்ளிய அவர் தனிப்பட்ட வாழ்வில் இப்படி ஒரு முடிவுக்கு வந்தது திரைத்துறையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரைப் போன்று ஹீரோயின் சோபாவும் இளம் வயதிலேயே காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ – ண் டா ர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply