சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!!! ரசிகர்கள் மகிழ்ச்சி…

சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!!! ரசிகர்கள் மகிழ்ச்சி…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சின்னத்திரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரது திறமைகளின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சமுதாய அக்கறை கொண்ட மனிதர். தற்போது வன விலங்குகளை பாதுகாக்க அவர் செய்த காரியம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 2452 வன விலங்குகள் பாதுகாக்கபட்டும் பராமரிக்கபட்டும் வருகிறது. தென் கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இதுவும் ஒன்று.

இந்த பூங்காவில் பொதுமக்கள் ஒரு பார்வையாளராக வந்து அந்த விலங்குகளை பார்த்து செல்வது மட்டுமல்லாமல் அந்த விலங்குகளை தத்தெடுக்கும் ஒரு திட்டமும் இந்த பூங்காவில் உள்ளது. இதன் மூலம் அந்த விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அந்த விலங்கிற்குரிய உணவு மற்றும் பராமரிப்பிற்குரிய செலவுகளை கொடுக்கலாம். செலவிடும் தொகைக்கு வரி விலக்கும் கொடுக்கப்படுகிறது.மேலும் பூங்காவை இலவசமாக சுற்றி பார்க்கும் சலுகையும் கொடுக்கப் படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அந்த பூங்காவில் உள்ள விஷ்ணு என்னும் ஆண் சிங்கத்தையும் ப்ரக்ரித்தி என்னும் பெண் யானையையும் 6 மாதத்திற்கு தத்தெடுத்து உள்ளார். அவருக்கு மீதுள்ள அக்கறை ஆர்வம் அனைத்தும் இந்த செயலின் மூலமாக வெளிப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் விலங்கினங்கள் அழிவதை தடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இது போன்ற பிரபலங்கள் விலங்குகளை தத்தெடுப்பதன் மூலம் ஒரு முன்னோடியாக தெரிவர். இதன் மூலம் பலரும் இதனை செய்ய முன்வருவர்.

ஏற்கனவே 2018 ல் அணு என்கின்ற வெள்ளை புலியை சிவகார்த்திகேயன் 2020 வரை தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply