சந்தியாவுக்கு கர்ப்பம் உறுதியாக கௌரி மேடம் அதிர்ச்சி கொடுத்துள்ளார்!!இன்றய முழு எபிசொட் 25/10/2022

சந்தியாவுக்கு கர்ப்பம் உறுதியாக கௌரி மேடம் அதிர்ச்சி கொடுத்துள்ளார்!!இன்றய முழு எபிசொட் 25/10/2022

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் RAJA RANI 2. இன்றைய எபிசோடில் அப்துல் சந்தியாவை திட்டிக் கொண்டிருக்க அப்போது வரும் கௌரி மேடம் உங்களுடைய டீம்தான் ரொம்ப மோசமாக பர்பாம் பண்ணியது, என சொல்ல அப்துல் சந்தியாவை அதிகம் திட்டுகிறார். சந்தியாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என டீமில் இருப்பவர்கள் சொல்ல அப்துல் ஒரே ஒரு வாய்ப்பு தான் அதிலும் சரியாக செய்யவில்லை என்றால் அவங்களாக டீமில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

பிறகு சந்தியா ரூமுக்கு வர சரவணன் பலமுறை போன் செய்திருப்பதை பார்த்து அவருக்கு போன் பண்ண சரவணன் நீங்க சொல்றத வச்சு எல்லாம் பார்க்கும் போது நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று தோணுது என சொல்ல முதலில் சந்தியா சந்தோஷப்படுகிறார். சரவணன் பரிசோதனை பண்ணி பாத்துட்டு என்னன்னு சொல்லுங்க என்ன சொல்ல சந்தியா அங்கே இருக்கும் மெடிக்கல் சென்டர் டெஸ்ட் கிட் கேட்டு வாங்க அந்த நபர் கௌரி மேடமுக்கு அறிக்கை கொடுத்து விடுகிறார்.

ரூமுக்கு வரும் சந்தியா டெஸ்ட் ரிசல்ட் பார்க்காமல் கையில் வைத்துக் கொண்டிருக்க அப்போது சரவணன் போன் போட்டு என்ன ஏது என கேட்க இன்னும் பார்க்கவில்லை என சொல்ல உடனே பாருங்க என கூறுகிறார். பிறகு சந்தியா டெஸ்ட் கிட் பார்க்க கர்ப்பமாக இருப்பது உறுதியாக அதிர்ச்சி அடைகிறார். இந்த விஷயத்தை சரவணன் இடம் சொல்ல அவரும் அதிர்ச்சடைய பிறகு கௌரி மேடம் அங்கு வந்து நீ கர்ப்பமாக இருக்கியா! உன்னுடைய டெஸ்ட் ரிசல்ட் தானா என கேட்க ஆமாம் என சொல்கிறார்.

அடுத்து கௌரி மேடம் உன்னால் இந்த பேச்சில் தொடர முடியாது அடுத்த பேட்ச் வந்து பிராக்டிஸ்ல சேர்ந்துக்கோ என சொல்ல சந்தியா வேறு வழி எதுவும் இல்லையா என கேட்க அதை நான் சொல்ல முடியாது நீங்க தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறுகிறார். பிறகு கௌரி மேடம் சரவணனிடம் இந்த விஷயத்தை கூறுகிறார். பிறகு சரவணனிடம் கௌரி சந்தியாவை வந்து அழைத்துச் செல்லுமாறு சொல்கிறார். அடுத்து சரவணன் இந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய RAJA RANI 2 எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply