சந்தியாவுக்கு அப்துல் விட்ட சவால் ஒரு பக்கம் இருக்க சரவணன் தேர்தல் விஷயத்தில் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

சந்தியாவுக்கு அப்துல் விட்ட சவால் ஒரு பக்கம் இருக்க சரவணன் தேர்தல் விஷயத்தில் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிர பல மா – ன தொடர் RAJA RANI 2. இன்றைய எபிசோடில் சந்தியா மற்ற மாணவர்கள் ஸ்கிப்பிங் செய்யும் இடத்திற்கு செல்ல அப்போது அப்துல் சந்தியாவை ஏளனமாக பேசுகிறார். மேலும் இப்ப கூட உங்களுக்கு டைம் இருக்கு உங்களால முடியாதுன்னு சொல்லிட்டு ஊருக்கு போய் சந்தோஷமா இருங்க என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த பக்கம் சரவணன் கடையில் இருக்க அப்போது வரும் ஊர் பெரியவர்கள் வியாபாரிகள் சங்க தேர்தலில் அதிக ஊழல்களில் ஈடுபட்டு பணத்தை களவாடிய பரந்தாமனை எதிர்த்து நீங்கள் போட்டியிட வேண்டும் என சொல்ல சரவணன் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறுகிறார்.

அடுத்து பரந்தாமன் மற்றும் அவருடன் சிலர் சரவணன் கடைக்கு வந்து இந்த தேர்தலில் நிற்க கூடாது என மிரட்ட சரி நான் நிற்கவில்லை, ஆனால் நீங்க இதுவரை களவாடிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு இனி எனக்கும் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விலகிக் கொள்ள வேண்டும் என சொல்ல அவர்கள் சரவணன் மீது கோபப்படுகின்றனர். மேலும் சரவணன் இதுக்காகவே நான் தேர்தலில் நிற்கிறேன் என சவால் விடுகிறார்.

இந்த பக்கம் சந்தியா கோப்பை அருகே நின்று உனக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு நீ இல்லாம நான் இந்த இடத்தை விட்டு போக முடியாது என வசனம் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் அப்துல் நீங்க என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த கோப்பை உங்களுக்கு கிடைக்காது அது எனக்கு தான் அதில் என்னுடைய பெயர் தான் எழுதியிருக்கு என்னை தாண்டி தான் அந்த கோப்பையை கனவில் கூட நினைத்து பார்க்க முடியும் என சவால் விடுகிறார். இதைக் கேட்டு சந்தியா இது யாருக்கு என்பதை முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கு என சொல்ல கடைசியில் இந்த கோப்பை இருவரில் யாரிடம் இருக்கிறது என பார்த்து விடலாம் என சவால் விட இத்துடன் இன்றைய RAJA RANI 2 தொடர் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply