கோபி சொன்ன பொய்யால் ராதிகா ஆப்பு வைத்துள்ளார்.இன்றய முழு எப்பிசோடு 31/10/2022

கோபி சொன்ன பொய்யால் ராதிகா ஆப்பு வைத்துள்ளார்.இன்றய முழு எப்பிசோடு 31/10/2022

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் vijay டிவியில் ஒளி பர ப் பா கி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி வெளியே வர இந்தப் பக்கம் ராதிகா மயூவுக்கு லன்ச் கொடுக்க கோபி எனக்கு லஞ்ச் இல்லையா என கேட்க நீங்கதானே மூணு வேலையும் வெளியே தான் சாப்பிடுவேன் என்று சொன்னீங்க உங்களுக்கு லஞ்ச் வேணுமா? வேணும்னா உப்புமா இருக்கு தரவா என கேட்க கோபி வேண்டாம் என சொல்லி விடுகிறார். உனக்கு எதுக்கு கஷ்டம் நான் வெளியவே பாத்துக்குறேன் நீ மயூவுக்கு மட்டும் லஞ்ச் கொடுத்தால் போதும் என சொல்கிறார்.

அடுத்து கோபி ஸ்கூல் பேக்கை தூக்கிக்கொண்டு காருக்கு வர இதை பார்த்த இனியா கடுப்பாகி நடந்து செல்ல கோபி ஸ்கூலில் டிராப் செய்வதாக சொல்ல இனியா காரில் ஏறாமல் செல்கிறார். அடுத்து கோபி தன்னுடைய நண்பனிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அவருக்கு 40 ஆயிரம் கிரெடிட் ஆக யார் பணம் போட்டது என யோசித்துக் கொண்டிருக்க இந்த நேரத்தில் பாக்யா போன் செய்து உங்களுக்கு 40 லட்சம் தருவதாக சொல்லியிருந்த நிலையில் முதல் தவணையாக 40 ஆயிரம் போட்டு இருக்கேன் வந்து இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க என சொல்லி போனை கட் செய்து விடுகிறார்.

பாக்யாவின் இந்த அதிரடியான செயலால் அதிர்ச்சியிருக்கும் கோபிக்கு பிபி ஏறுகிறது. இடியட் இடியட் என திட்ட அவருடைய நண்பன் யாரடா இப்படி திட்டுகிறாய் என கேட்க அது பழைய கிளையண்ட் பழைய கணக்கு என சொல்கிறார். அடுத்து மயூவை கூட்டிக்கொண்டு கோபி வீட்டுக்கு வர தலை வலிக்குது கொஞ்சம் காபி கிடைக்குமா என கேட்க அதற்குள் மயூ கூப்பிட்டா என்பதற்காக ராதிகா உள்ளே சென்று விடுகிறார். கடைசி வரைக்கும் உனக்கு இந்த வீட்ல காபி கிடைக்காது என கோபி புலம்புகிறார்.

மேலும் அவர் ராதிகாவிடம் பாஸ்போர்ட் ஆபிசிலிருந்து அப்பாயின்மென்ட் லெட்டர் வரும், அது அந்த வீட்டு அட்ரசுக்கு தான் போகும், போஸ்ட்மேன் வர டைம் என்பதால் போஸ்ட்மனை பார்த்து லெட்டர் வாங்க காத்துக் கொண்டிருப்பதாக சொல்ல போஸ்ட் மேன் பாக்யா வீட்டுக்கு சென்று லெட்டர் வந்திருப்பதாக சொல்ல கோபியின் அப்பா அப்படி யாரும் இந்த வீட்ல இல்ல அந்த பேருக்கு லெட்டர் வந்தால் இங்கே கொண்டுவராதீங்க என சொல்ல போஸ்ட் மேன் லெட்டரை எடுத்துச் சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply