கோபிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது ராதிகாவின் குடும்பம்.இன்றய முழு எபிசொட் 21/10/2022

கோபிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது ராதிகாவின் குடும்பம்.இன்றய முழு எபிசொட் 21/10/2022

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட் HOTAL சாப்பாட்டை பரிமாற எல்லோரும் சாப்பிட்டு நல்லா இருக்கு ஆனா நீ தான் சமைச்சியா என்ன சந்தேகமா இருக்கு என பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்படியே இந்த பக்கம் கோபி ராதிகாவின் வீட்டில் குளித்துவிட்டு டவல் கேட்டு ராதிகாவுக்கு குரல் கொடுக்க ராதிகா அவருடைய அம்மா அண்ணா என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபியின் குரலைக் கேட்டு எந்த ஒரு பதிலும் வரவில்லை. காட்டு கத்து கத்தும் கோபி அதன் பிறகு அவரே டவலை தேட அதுவும் கிடைக்காமல் தன்னுடைய வேஷ்டியிலேயே தலையை துவட்டிக் கொள்கிறார்.

கீழே வரும் கோபியையும் யாரும் கண்டு கொள்ளவில்லை ஒரு மாப்பிள்ளை மரியாதையே இல்லை என கோபி மனதுக்குள் புலம்புகிறார். பிறகு கோபி காபி கேட்க வாயில் வைக்க முடியாத அளவிற்கு டீ போட்டு வந்து கொடுக்கிறார் ராதிகாவின் அம்மா. கோபி வீட்டில் அதிகாரத்தோடு நடந்து கொண்டதையும் இங்கு நடப்பதையும் ஒப்பிட்டு பார்த்து புலம்புகிறார்.

அடுத்து ராதிகா மேலே வர கோபி பேச முயற்சி செய்ய ராதிகா என்ன உங்க வீட்ல இருக்காங்க எவ்வளவு அசிங்கப்படுத்தினாங்க, நான் என்ன தப்பு பண்ண நானா உங்கள உங்க பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தேன்? நீங்கதானே உங்க குடும்பம் பிடிக்கலன்னு பிரிஞ்சு வந்தீங்க? சட்டப்படியும் நியாயப்படியும் நான் எந்த தப்பும் பண்ணல, என்ன அசிங்கப்படுத்துற எல்லார் முன்னாடியும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும் எனக்காக அது பண்ணுங்க அது போதும் என கூறுகிறார். கோபி செய்வதறியாது நிற்கிறார்.இந்த பக்கம் இனியா ஸ்கூலுக்கு போன பிறகு ஜெனி பாக்யாவிடம் அங்க அங்கிளை பார்த்ததும் உங்களுக்கு ஒரு மாதிரி இல்லையா என கேட்க எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பழகிடுச்சு போல என கூறுகிறார். பிறகு பாக்கியா சமைப்பதற்காக திறக்க உள்ளே இருந்து HOTAL கவர்களை பார்த்து என்ன இது என கேட்க ஜெனி அதிர்ச்சி அடைகிறாள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் எபிசோட் முடிவடைகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply