கேரளத்து ஓம்ன குட்டி மிஞ்சும் பேரழகு கொண்ட சுந்தரபாண்டியன் பட நடிகை!!

கேரளத்து ஓம்ன குட்டி மிஞ்சும் பேரழகு கொண்ட சுந்தரபாண்டியன் பட நடிகை!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

லட்சுமி மேனன்..

கேரளாவில் பிறந்து வளர்ந்த ஹீரோயின் லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் வருடம் பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் வருடம் இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது ஹீரோயின் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் ஹீரோயின் லட்சுமி மேனன் நடிகர் விஷாலுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக கூட செய்தி வெளியானது. ஆனால் அது வெறும் பொய்யான செய்தி என்று விஷால் விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருத்தனமாக தவறுகள் செய்து வீட்டில் மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்த லட்சுமி மேனன், ஆம், அப்படி நிறைய கேடி வேலை செஞ்சிருக்கேன் என கூறினார். நான் விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தின் CD வாங்கிட்டு வந்து கிட்டத்தட்ட 5 ,6 தடவை போட்டு பார்த்தேன் அதை புத்தகத்தில் மறைத்துக்கொண்டுபோய் என் தோழிகளுக்கு கூட கொடுத்திருக்கிறேன்.

அந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்து என்னை வெளுத்துக்கட்டினார்கள். அதுமட்டும் அல்லாமல் நான் இரவு நேரங்களில் எல்லோரும் தூங்கிய பின் என்னுடைய பாய்பிரண்டிற்கு பெட்ஷீட் போர்த்திக்கொண்டு மெஸேஜ் செய்திருக்கிறேன். அப்போது போனின் வெளிச்சத்தை கண்டுபிடித்த என்னுடைய அம்மா என்னை குமுறி எடுத்துட்டாங்க என வெளிப்படையாக திருட்டுத்தனமாக தான் செய்த வேலைகளை பற்றி கூறினார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply