T20 உலகக் கோப்பையின் கேப்டனாக பதவி வகிப்பவர் விராட் கோலி. இவர் தற்போது இந்த பதிவியிலிருந்து விலகுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய T20 அணியை 45 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார் விராட் கோலி. அதில் 29 போட்டிகளில் வெற்றியை தந்துள்ளார். வெறும் 14 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார். விராட் கோலியின் வெற்றி சதவீதமானது 67.44 % ஆகும். இந்த சதவீதமானது மகேந்திர சிங் தோனியின் வெற்றி சதவீதத்தை விட அதிகம்.
மேலும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்து இப்படி ஒட்டு மொத்த நாடுகளிலும் T20 தொடரை வெற்றி பெற்ற ஒரே கேப்டன் விராட் கோலியே. மேலும் ICC கோப்பை இல்லை என்ற விமர்சனத்தை தாண்டி பார்த்தால் இந்தியாவின் சிறந்த T20 கேப்டன் விராட் கோலி தான். ஆனாலும் தற்போது அவர் T20 கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்கிறார்.

அதற்கு காரணத்தை அவர் கூறுகையில், மூன்று விதமான போட்டிகளிலும் தான் கேப்டனாக இருப்பதால் அவரால் விளையாட்டில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை எனவும் தனது முழு கவனத்தையும் பேட்டிங்கில் செலுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 2023 உலக கோப்பை வரை விராட் கோலி ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக தொடர்வாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.
இது குறித்து பேசிய BCCI அதிகாரி ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் T20 உலக கோப்பை போட்டியில் இந்தியா சரி வர செயல்படவில்லை எனில் விராட் கோலியின் பதவி பறி போகும் என்று விராடிற்கு நன்றாக தெரியும். எனவே தான் BCCI இந்த முடிவை எடுப்பதற்கு முன் தானாகவே இந்த முடிவை எடுத்து விட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஓவர் போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக தொடர்வார் என்பதில் எந்த விதமான நிச்சயமும் இல்லை. T20 போட்டிகளில் விராட் கோலி சரி வர செயல் படவில்லை எனில் அவரது 50 ஓவர் கேப்டன் பதவி பறி போக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகினால் அடுத்த கேப்டன் யார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்க்கு பதிலாக ரோஹித் ஷர்மா தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஏனெனில் IPL கிரிக்கெட் தொடரில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்து கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா.

இது குறித்து விராட் கூறுகையில் தான் மிகவும் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் மேலும் பல பேரிடம் ஆலோசனை செய்த பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் ஓய்வு பெரும் வரி கண்டிப்பாக RCB அணிக்காக விளையாடுவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து சோசியல் மீடியாவில் பலரும் இது சரியான முடிவுதான் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் விராட் கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர்.