கூகுளில் நீங்கள் அறிந்திராத மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள்!!! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….

கூகுளில் நீங்கள் அறிந்திராத மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள்!!! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கூகுளானது உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தேடல் இயந்திரம் ஆகும்.
ஒரு நாளைக்கு 3.5 பில்லியன் இன்னும் சரியாக சொன்னால் 1 வினாடிக்கு 40 ஆயிரம் பேர் கூகுளை பயன்படுத்துகின்றனர்.

இந்த கூகுளில் நமக்கு தெரியாத வேடிக்கையான பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

நமது கூகுளில் சென்று “do a barrel roll” என்று டைப் செய்து தேடுங்கள். இப்போது உங்கள் போன் அல்லது லாப்டப்பின் ஸ்க்ரீன் சுழல ஆரம்பிக்கும்.

இதே போல அடுத்ததாக “google gravity” என டைப் செய்து தேடுங்கள். இப்போது கூகுள் காண்பித்த முதல் லின்க்கை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் ஸ்க்ரீனில் உள்ள அனைத்து எழுத்துக்களும் விண்வெளியில் உள்ளது போல கீழே விழுந்துவிடும்.

அடுத்ததாக கூகுளில் “zerg rush” என டைப் செய்து தேடுங்கள். இப்போது உங்கள் ஸ்க்ரீனில் உள்ள எழுத்துக்களை எல்லாம் சில பந்துகள் கடித்து தின்பது போல இருக்கும்.

அதுத்ததாக விளையாட்டுகள்
நமக்கு போர் அடித்தால் நாம் கூகுளில் சில விளையாட்டுகளும் விளையாடலாம்.
அதில் டைனோசர் விளையாட்டு நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் தெரியாத பல விளையாட்டுகளும் உண்டு.

Atari breakout, super mario brothers, pac man, போன்றவற்றை தனித்தனியாக டைப் செய்து கூகுளில் தேடி இந்த விளையாட்டுகளை விளையாடி பாருங்கள்.

இவ்வாறு வேடிக்கையான விஷயங்களுக்கு கூகுள், easter eggs என பெயரிட்டுள்ளது. இது போன்ற பல Easter eggsகளை தெரிந்து கொள்ள easter eggsஎன கூகிளில் தேடித் பாருங்கள். இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply