கல்யாண வீட்டில் டங்காமாரி பாட்டுக்கு குடும்பமே ஆடிய செம டான்ஸ்

கல்யாண வீட்டில் டங்காமாரி பாட்டுக்கு குடும்பமே ஆடிய செம டான்ஸ்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கல்யாண வீட்டில் டங்காமாரி பாட்டுக்கு குடும்பமே ஆடிய செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிறது.

முன்பெல்லாம் திருமணம் என்றால் சொந்த பந்தங்களுடன் உக்கார்ந்து பேசி தீர்ப்பது வழக்கம். ஆனால் இப்போதைய திருமணங்கள் அப்படி நடப்பது இல்லை அதுவும் கேரளாவில் சொல்ல தேவை இல்லை என்றே சொல்லலாம். அப்படி ஒரு வீடியோ தான் இன்று இணையத்தில் வைரல் ஆகிறது . இது கேரளாவில் நடந்த சம்பவம் போல் தெரிகிறது . ஆனால் எப்போது நடந்தது என்பது பற்றி தகவல் இல்லை .அந்த வீடியோவில் திருமண வரவேற்பு ஓன்று நடக்கிறது . அங்கே தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் இருந்து டங்காமாரி ஊதாரி பாடல் ஒலிக்கிறது . அங்கு வரும் அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆடிய படியே வருகின்றனர். பெரும்பாலோனோர் இளம் வயதினர் மட்டுமே அங்கு இருக்கின்றனர் அனைவரும் ஒலிக்கும் அந்த பாடலுக்கு ஆடிய வண்ணமே இருக்கின்றனர் . நன்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆடிய படியே மணமகன் மற்றும் மணமகளை நெருங்கும் போது . வெள்ளை நிற ஆடையில் வரும் பெண் ஆடிய ஆட்டத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது இணையத்தில் . அவர் குறித்தே பல கருத்துக்கள் அந்த வீடியோ கமெண்டில் பகிரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நண்பர்களுடன் சேர்ந்து இறுதியில் மணமக்களும் போட்ட ஆட்டம் ஒட்டுமொத்த இணைய வாசிகளையும் ஈர்த்துள்ளது . அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply