கருப்பான உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக மாற வேண்டுமா??? ஒரு முறை செய்தால் போதும்…

அழகு குறிப்பு

உங்களது உதடுகள் மிகவும் கருமையாக உள்ளது என கவலைப் படுகிறீர்களா? இனிமேல் நீங்கள் கவலைப் பட வேண்டாம். இந்த பதிவில் உள்ளதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள். முதல் முறை பயன்படுத்தும் போதே உங்கள் உதடுகள் சிவப்பாக மாறி உள்ளதை உணர்வீர்கள்.

உதடானது பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய உதட்டின் அழகை பராமரிப்பது அவ்வளவு கடினம் இல்லை. நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் அழகு பொருட்கள் முழுவதுமே ரசாயனத்தால் உருவாக்கப்பட்டது தான். நம் உதடானது மிகவும் மென்மையானது. அந்த உதட்டில் இந்த ரசாயனங்களை சேர்ப்பது நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தும். எனவே இயற்கையான வழியில் உதட்டை எவ்வாறு சிகப்பாக்கலாம் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதனை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் சாறு
  • விட்டமின் E மாத்திரை
  • ஆலோவேரா ஜெல்

செய்முறை:
பெரிதாகவும் இல்லாமல் சிறிதாகவும் இல்லாமல் அளவாக ஒரு பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸ்யில் வெட்டி போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி மூலம் பீட்ரூட் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட்டில் சருமத்தை நிரந்தரமாக பொலிவு படுத்தும் தன்மை உள்ளது.

அதன் பின் வடிகட்டி எடுத்த பீட்ரூட் சாற்றை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் போன்று இருக்கும் பீட்ரூட் சாற்றை நன்றாக சுண்ட வைக்கவும். இதனை ஒரு 10 நிமிடத்திற்கு செய்யவும். முதலில் எடுத்த அளவில் பாதிக்கும் குறைவான அளவு வரும் வரை இப்படி செய்யவும்.

அதன் பின் கொதிக்க வைத்த பீட்ரூட் சாற்றுடன் விட்டமின் E மாத்திரையை சேர்க்கவும். விட்டமின் E மாத்திரை இல்லாதவர்கள் ஆலிவ் எண்ணையை பயன்படுத்தலாம். விட்டமின் E ஆனது உதட்டை சேதப்படுத்தாமல் மிருதுவாக இருக்க உதவும். இதனை பயன்படுத்துவதன் மூலம் மென்மையான உதடுகளைப் பெறலாம்.

பிறகு , செய்து வைத்த கலவையில் ஒரு தேக்கரண்டி ஆலோவேரா ஜெல் சேர்க்கவும்.ஆலோவேராவானது உதட்டை வறட்ச்சியில் இருந்து பாதுகாக்கும். கருமை நிறத்தை மாற்றி உதடு பொலிவு பெற இது மிகவும் உதவுகிறது. அதனை சேர்த்த பின் கரண்டி வைத்து நன்றாக கலக்கவும். தற்போது ஒரு cream பதத்தில் கிடைத்திருக்கும். அவ்வளவு தான் அடுத்தது உதட்டை சிவப்பாக்க வேண்டியது தான்..

சேமிக்கும் முறை:
இதனை அதிகளவில் செய்து சேமித்தும் வைக்கலாம். இதனை குளிர்சாதனப் பெட்டியிலும் சேமிக்கலாம். அல்லது சாதாரண வெப்பநிலையிலும் வீட்டில் வைத்திருக்கலாம். குளிர்சாதனத்தில் சேமிப்பவர்கள் தாராளமாக ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம். வீட்டில் சாதாரணமாக வைப்பவர்கள் 15 நாட்கள் வரை வைக்கலாம்.

பயன்படுத்தும் முறை:
தினமும் இரவு தூங்கும் முன் இதனை உதட்டில் தடவிக் கொள்ளலாம். இதனை தடவி விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம். மறுநாள் காலையில் முகம் கழுவவதை போலவே இதனையும் கழுவிக் கொள்ளலாம். பகல் நேரங்களிலும் கூட இதனை பயன்படுத்தலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை செய்யலாம்.

இதனை முதல் முறை பயன்படுத்தும் போதே நல்ல முடிவு கிடைக்கும். இதனைக் கண்டிப்பாக வீட்டில் செய்து பார்த்து பலனடையுங்கள்…

Leave a Reply