கமலகாசனின் தேவர் மகன் 2 இயக்குனர் யார் .? அதிவேகமாக தொடங்கவுள்ள திரைப்படம்

கமலகாசனின் தேவர் மகன் 2 இயக்குனர் யார் .? அதிவேகமாக  தொடங்கவுள்ள திரைப்படம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் பெரிதும் கலக்கியுள்ள.உலகநாயகன் கமல்ஹாசன், இப்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்றும் நடிகை ஷிவானி இப்திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இணைந்து நடிக்கிறாராம் இப்படத்தின் முதன்மை படப்பிடிப்பு வட சென்னையில் நடந்து முடிந்த
]காரணத்தால் . அடுத்தக்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் அதிவிரைவில் தொடங்க உள்ளனர் . தற்போது ஒரு பேட்டியில் பேசிய கமல், விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடிந்ததும் இந்தியன்-2 படத்தின் மிதம்முள்ள திரை காட்சிகளில் நடிக்க உள்ளேன் என கூறினார்.

சங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்தநிலையில் . முன்பு லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும்ஏற்பட்ட பிரச்னை தகவல் வந்தது, கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என தெரிய படுகிறது .இந்நிலையில், விக்ரம், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து முடித்த பின்னர், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளதை சமீபத்திய பேட்டியில் கூறிஉள்ளார் கமல்.

இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ள மலையாள படத்துக்கு நம்ம கமல்ஹாசன் தான் திரைக்கதை அமைக்க உள்ளாராம். சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த படம் வெற்றி பெற்ற மாலிக் என்கிற மலையாள படத்தை மகேஷ் நாராயணன் இயக்கிஉளர் குறிப்பிடத்தக்கது.மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படம் தேவர்மகன்-2 என தற்போதுசெய்தி வெளி வந்துள்ளது. 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் சிவாஜி, கமல், நடிப்பில் வெளியான தேவர்மகன் கமல்ஹாசனின் திரையுலகில் வரலாற்றில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப்படம் ஆஸ்கர் ரேஸில் சேர்ந்து கடைசியில் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படம் எப்போது தொடங்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. விரைவில் இந்த படம் தொடங்கப்படும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் அறிவித்துள்ளனர் ….

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply